யுகம் யுகமாய் காத்திருக்கும்
இயல்பாய் இருக்கும் தூரிகை
வண்ணத்தில் கலந்துருவாக்கும் பலகாரிகை
கண்களுக்கு அக்காட்சி பேருவகை
புதுப்புது ஓவியம் காண்பதே ஜயபேரிகை
வண்ணங்கள் சங்கமித்து உருவாக்கும் புதுவண்ணம்
அதைக்கண்டு மனதிற்குள் ஏற்படுமே புதுஎண்ணம்
அழியாத காலத்தை தூரிகைகள் உருவாக்கும்
ஆழமான காயத்தை காட்சிபடுத்த கருவாக்கும்
பிடித்தவனின் கரம்தானே தூரிகையை வழிநடத்தும்
பலவடிவம் பலஉருவம் தூரிகைக்கும் இங்குண்டு
வரைபவரின் மனக்காட்சி பார்ப்போருக்கு தெரிந்திட்டால்
படைத்தவனின் வெற்றியோடே தூரிகையும் குதுகளிக்கும்
மோட்சம்சென்ற தூரிகையும் பூவுலகில் வாழ்ந்திருக்கும்
பல்லாயிரம் ஆண்டுபின்னும் களிப்புடன் நமைபார்த்திருக்கும்
படைத்தவனின் கண்கள் அதனுள்ளத்தில் பதிந்திருக்கும்
திரும்பவும் அவன்வருவானவென யுகம்யுகமாய் காத்திருக்கும்....