எதிர்பாரா திருமணம்

எதிர்பாரா திருமணம்

எதிர்பாரா விபத்தாய்
சேர்ந்த ஓர்
உறவு !
அருகில் இருந்தும்
அந்நியராக வாழும்
வாழ்க்கை !

நாட்கள் நகர
நெஞ்சில் ஓர்
புரிதல் !
புரிந்தாலும் ஏதும்
புரியாததை போல்
நடிப்பு !

ஒருவரை ஒருவர்
அறியாமல் பார்த்துக்கொள்ளும்
கரிசனம் !
செய்வது தெரியாமல்
மனதில் குடிக்கொள்ளும்
காதல் !

காதல் சொல்லும்
கனத்தில் நம்
இருவரை பிரிக்கும்
பயணம் !

மனமின்றி போகும்
என் இதயத்தை
திருடிக் கொண்ட
நீ !

நாளும் உன்
நினைவில் போரிடும்
நான் !

கூடும் நாளை
ஏதிர்பார்த்துக் கொண்டு
நாம் !

எழுதியவர் : புகழ்விழி (12-Jun-16, 11:29 am)
பார்வை : 183

மேலே