உன் வெற்றி

நேற்று பேசிய வார்த்தைகள்
நினைவில் நிற்பதில்லை !
நிமிடங்கள் தாண்டி சென்று
நாட்கள் கடந்து
அன்று பார்த்த பார்வையில்
நா பேசாது
விழிகள் பேசிய மொழிகள்
நெஞ்சை குடைகின்றதே ! - உன்
விழிகள் என் இதயத்தை
தோற்கடித்ததென நினைத்தேன் !
இதயம் தாண்டி நினைவையும்
வெற்றி கொண்டுவிட்டது !