எல்லாம் அழகு என்னவளிடம்

மெல்லிய பூங்காற்று
மேனியை தீண்டும் போது
புன்னகைக்கும்
புது நிலவு ஒன்று
தன் பெண்மையை உணர்ந்து...

விழிகளில் ஒரு
விசித்திரமான தீவு
செல்லும் பாதை எங்கே?
சென்றால் திரும்பும்
பாதை எங்கோ???

வானத்திடம் இருந்து
திருடிய நிலவை
திருப்பி கொடுத்து விடு...
நீ உறங்கும் நேரத்தில்
கண்களை மூடிகொண்டால்
உன்னால் இருள்
அடைகிறது வானம்..

உன்னை சிலையாய்
செதுக்க சிற்பியிடம்
கேட்டேன்...அவனோ
தங்க சிலையை
மண்ணால் செதுக்கினால்
தேவதைகள் எல்லாம்
என்னை சபித்துவிடும்
என்றான்...

கண்களில் அழகை
வைத்திருக்கும்
இவளின் எல்லா
எண்ணங்களும் மௌனங்களே...
பல வண்ணங்களில்
உடை அணியும்
வண்ண பூந்தோட்டமே
உன்னை கண்ட பிறகு
வானவில் குழப்பத்துடன்
பார்க்கிறது நம்மிடத்தில்
உள்ளதா???இத்தனை
வண்ணங்கள்...

உன் இதழை பார்க்கும்
போது எனக்கு
புரியவில்லை...
என்னுள் ஒரு போதை
உன்னை தேடி
வந்த பாதை
மறந்து போனதா?
இல்லை....
மறைந்து போனதா??

சிலு சிலுவென
பொழியும் மழை துளியும்
சில நிமிடம்
மௌனமாகும் நீ
சிரிக்கும் சப்தத்தை கேட்டு..
இடி முழக்கங்கள் உன்
வருகைக்கு முரசு கொட்டும்...

மழையின் துளியில்
உன் கைகள்
வீணை வாசிப்பதால்
இதுவரை கேட்காத
சங்கீத சப்தம்
என் இதயம் முழுவது...

வானின் தேவதைகள்
உன்னை வரவேற்பது
ஏன்???
அழகாய் பிறந்த இவள்
பூமியில் வாழ்வது
உலகிற்கு ஆபத்து
என்பதால்

கவிதைகள் கற்பனையில்
பிறந்தது..அழகாய்
பிறந்த உன்னை
கவிதையாய் எழுதுவது
எனக்கு கிடைக்கும் விருது..

என் கவிதை பார்க்கும்
உன் கண்கள் அழகு..
அதை படிக்கும்
உன் இதழ்கள் அழகு..
உனக்காக யோசிக்கும்
என் வரிகள் யாவும்
உன்னை போல் அழகு...

எழுதியவர் : சபானா ஆஷிக் (12-Jun-16, 12:36 pm)
பார்வை : 454

மேலே