தினம் ஒரு தத்துவ பாட்டு - 17 =132

“கெட்ட எண்ணம் கேடுக்கெட்ட புத்தி
கொண்டவனெல்லாம் குடும்பத்தின் தத்தி
துட்டு பெற்று தீமையை விளைக்கும்
துச்சனெல்லாம் தேசத்தின் தீயசக்தி

மனுசனென்றால் மானம் முக்கியம்
மானம்போனால் நிம்மதி பூச்சியம்
துன்பம் செய்யும் நெஞ்சமிருந்தால்
இன்பம் எங்கே நம்மில் நிகழும்…?

மனமென்பது மாணிக்கம் போன்றது - அது
அன்பு செலுத்த செலுத்த மெருகேறுது
குணமென்பது மனுசன் கூடப்பிறந்தது - அது
இரக்கப்பட்டு பட்டே இன்பம் காணுது !

பணமென்பது பாதாளம் வரைக்கும்
பாயும் என்பது பழைய கணக்கு…!
ஊடகக் கண்கள் ஒவ்வொன்றும்
ஊரைச் சுற்றிசுற்றி நோட்டம் விடுது !

இன்பம் செய்யும் நெஞ்சங்களே
துன்பம் உமக்கு துச்சங்களே…
துன்பம் செய்யும் நெஞ்சங்களே
இன்பம் உமக்கு சொச்சங்களே

பணப்பெட்டியில் கணமிருந்தால்
வழித்தடங்களில் பயம் சுரக்கும்
குணப்பட்டியலில் இடம் பிடித்தால்
சவக்குழிகளும் சலாம் அடிக்கும்

பணத்தைப் பெரிதாக நினைப்போருக்கு
குணத்தின் அருமை தெரியாது
குணத்தை பெரிதாக நினைப்போருக்கு
பணத்தின் பெருமை பெரிதாகாது

செய்நன்றி மறந்தவருக்கு - செல்வம்
சேர்ந்தாலும் நிம்மதி இருக்காது
என்நன்றி கொன்றாருக்கு - சொல்லும்
செயலும் நிலையாக நில்லாது .

எழுதியவர் : சாய்மாறன் (12-Jun-16, 1:14 pm)
பார்வை : 139

மேலே