மறைந்து நிற்கும் எழில்கள்

இதோ இந்த செடியைப் பார்

அந்த கொடியைப் பார் மற்றும்

அந்த சாலை ஓரம் வானளாவி

வளர்ந்து நிற்கும் நிழல் தரும்

பச்சை மரங்களைப் பார்


அந்த பச்சை கொடிகளைப் பார்

அது தாங்கி நிற்கும்

வண்ண வண்ண

நறு மணம தரும்

மலர்களைப் பார்


இந்த மரங்கள்

செடிகள் கொடிகள்

அவற்றில் எழிலைக்

காணும் பூக்கள்

மற்றும் காய்கள்

ஆகிய இவற்றின் ஜீவன்

நம் கண்ணிற்கு தெரியா

நிலத்திற்கு கீழே

எழில் ஏதும் இல்லா

வேரும் வேர் கூட்டங்களும் !

வேரின்றி செடி இல்லை

கொடி இல்லை

மரங்கள் ஏதும் இல்லை !

வண்ண வண்ண இத்தாவரங்கள் போல்

அழகு பொங்கும் நாரிமணிகள்

சிம்ம நடைப் போட்டு

உலா வரும் வாலிப கூடங்கள்

இவர்கள் எழிலின் பின்னே

இருப்பது யாவது

அது தான் ஜீவன்

இதுவும் கண்ணுக்கு

தெரியாமல் இருப்பது வே

வேரில்லாமல் வாழாது

செடி கொடி மரங்கள்

உயிர் இல்லையேல்

உடம்பில், மனித உடம்பில் அக்கணமே

எழில் மறைந்து போகும்

அந்தோ அங்கு நாம் காண்பது

வெறும் கட்டையே

இவ்வாறு தாவரங்கள் வேர்களும்

மானிடரின் உயிர்களும்

பேசிக் கொண்டனவாம் !

அவை கண்ணுக்கு தெரியா

எழில்கள் அன்றோ !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jun-16, 5:49 pm)
பார்வை : 120

மேலே