தெரியவில்லை

தெரியாமல் கூடிய சந்திப்பில்
தெரிந்து பழகிய உணர்வு
தெரியாமலே குடிக்கொண்டு
தெரியாத உறவை
தெரிந்த உறவாக்க
தெரியாமலே வளர்ந்தது
காதல் !

தெரியாமல் வளர்ந்த
காதலை அவனும்
விழியால் தெரிவிக்க.............

தெரிந்த கேள்விக்கு
தெரிந்தும் பதில்
எழுதாதை போல்
தெரிவித்த காதலை
தெரிந்தும் அவள்
தெரியாதை போல்
காட்டினாளே !

தெரியாமல் வளர்ந்த
காதல்
தெரியாமலே போய்விடுமோ !

இல்லை

தெரிவித்த காதலுக்கு
பதிலை அவளுக்கு
தெரியாமலேயே தெரிவிப்பாளோ !

தெரியவில்லை..................

எழுதியவர் : புகழ்விழி (17-Jun-16, 6:16 pm)
Tanglish : theriyavillai
பார்வை : 115

மேலே