கரை ஓரத்தில்

கரையோரத்தில்
___________________

கடிவாளமிட்ட குதிரையை
விரட்டிக்கொண்டே
புயலெனப் பாய்கிறது புழுதி
எதிர்நாட்டு அரசரின்
கூரியவாள் முனையில்
நின்றிருந்த மகாராணியின்
இமைகளில் ஊர்ந்த எறும்பு
நறுக்கென்று கடித்த
தடத்தில் பெருவெள்ளம் கரைபுரண்டது...
_______________________________________
-திரு
_______________________________________

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 12:41 am)
பார்வை : 224

மேலே