நனையும் இரவு

மெல்லத் தூறும்
மழையில் கரைகிறது
அவள் காதணி
பட்டுச் சிதறுகின்ற
முத்துத் துளிகளில்
வானத்தின்
வைரத்திட்டுகள் உடையும்
சப்தங்கள் உலாவருகிறது
பூவின் அரும்புகள் துளிர்க்கும்
செவித் தாள் மீது...
உருகிக்கொண்டிருக்கிறது
எழுதத் தவிக்கும்
அவளின் ஏக்கங்கள்...
கடைந்து வைக்கப்பட்ட
கஞ்சியில் மழைநீர் நிரம்பிக் கொண்டிருந்தது...
ஊசிக்குள் நுழையும் நூல்போல்
எங்கிருந்தோ வந்து
தஞ்சம் கொண்டது
அந்த முனகல் தாபம்...
அவளின் சுகத்தில் நிச்சயம்
நனைந்திருக்கும்
மேம்பாலத்தில் படுத்துறஙகும்
இரவுகள்...
_______________________________________
-திரு
_______________________________________