நமது அன்றாட செயல்களைச் செய்யும் முறையான வழி முறைகள்
நமது அன்றாட செயல்களைச் செய்யும் முறையான வழி முறைகள்.
--------------------------------------------------------------------------------
பல் துலக்கும் முறை !
---------------------------
** முழங்காலிட்டு முன்னால் தலையை சாய்த்து பல் துலக்க வேண்டும்.
**பிரஷ்ஷிற்குப் பதில், மோதிர விரலால் அல்லது நடு விரலால் தேய்க்கலாம்.
** உள்ளிருந்து தேய்க்கக் கட்டை விரலைப் பயன்படுத்தவும்.
விரல்களால் ஈறுகளை அழுத்த அவை வலுவடையும்.
**பற்களைத் தேய்க்க, எலுமிச்சை, வேம்பு, அத்தி, பலாமரக் குச்சிகள். கோபர்
வாயுவின் சாம்பல், படிகாரப் பொடி, ஆயுர்வேதப் பொடி ஆகியவற்றைப் பயன்
படுத்தலாம்.
---------------------------------------------------------------------------------------------
பெருக்குவதன் சரியான வழிமுறை:
----------------------------------------------
**இடுப்பளவு குனிந்து வலது கையால் பெருக்கவும்.
**கிழக்கிலிருந்து தெய்வங்களின் சகுண அதிர்வலைகள் கிழக்கு நோக்கி பூமிக்கு வருவதால்
கிழக்கு நோக்கிப் பெருக்கக் கூடாது.
**குப்பையைப் பெருக்கி வாயிற்கருகேக் கொண்டு செல்வதால், தீய அதிர்வலைகள்
வெளியே தள்ளப்படுகின்றன.
** பெருக்கும்போது மறுபக்கம் துடைப்பத்தைத் தரையில் தேய்த்துப் பெருக்கக் கூடாது. அதனால்
பாதாளத்திலிருந்து கஷ்டம் தரக்கூடிய அதிர்வலைகள் அதிகம் ஏற்படுகின்றன. துடைப்பத்தைத்
தரையில் தட்டக் கூடாது.
** வாக்யூம் கிளீனரை உபயோகப் படுத்துவதால், சுற்றுப்புறச் சூழலில் ரஜ-தம தன்மை அதிகமாகி
அங்குள்ள மனிதர்களையும் பாதிக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
குளிப்பதன் சரியான வழி முறை !
----------------------------------------
**சூரிய உதயத்திற்கு முன்பு அல்லது சூரிய உதயத்தின் போது குளிக்கவும்.
**சாத்வீக ஸ்நானப் பொடி அல்லது ஆயுர்வேத சோப் பயன்படுத்தவும்.
** குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பைக் கலந்து "என் உடலில் கஷ்டம் கொடுக்கும் தீய சக்திகள்
இந்தக் கல் உப்பில் இறங்கி நான் தூய்மை அடைய வேண்டும் " என குல தெய்வத்திடம்
பிரார்த்திக்கவும்.
பின் வரும் ஸ்லோகத்தைச் சொல்லவும்.
"கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே
சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரு. "
** குளிக்கும் போது குல தெய்வ நாமஜபம் செய்யவும்.
---------------------------------------------------------------------------------------------------------
குங்குமம்,விபூதி மற்றும் திலகம் இட்டுக் கொள்வதன் முறையும் பயனும் !
-----------------------------------------------------------------------------------------
** நெற்றியின் புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரத்தில்) மின்காந்த அதிர்வலைகளான சக்தி ஏற்படுகிறது.
குங்குமம்,திலகம்,விபூதி இட்டுக் கொள்வதன் மூலம் அமைதி ஏற்படுகிறது.தீய சக்திகளிடமிருந்து
பாதுகாப்பு கிடைக்கிறது.
** குங்குமம்: பெண்கள் தங்கள் மோதிர விரலை உபயோகித்து, குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
மற்றவருக்கு தன் நடுவிரலைக் கொண்டு ஆக்ஞா சக்கரத்தில் இட வேண்டும்.
** ஆண்கள் நடுவிரலால் ஆக்ஞா சக்கரத்தில் மேல் நோக்கித் திலகம் இட வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
துணி துவைப்பதன் சாஸ்திரம் !
-----------------------------------------
**துவைத்த ஆடைகளையே உடுத்த வேண்டும். குனிந்து துணி துவைப்பதால் தொப்பூழ்ப்
பகுதியில் உள்ள மணிபூரகச் சக்கரம் விழிப்படைந்து, பஞ்ச பிராணனை (உடலினுள் இருக்கும் பஞ்ச பூதங்களை)
செயல்பட வைக்கிறது.
** சூரிய நாடி விழிப்படைந்த நிலையில் இருப்பதால் தேஜ தத்துவ அதிர்வலைகள் கைகள் வழியாக ,
சூட்சுமமாகத் துணிக்குள் பாய்ந்து ரஜ-தம (ராக்ஷச குணத்) தன்மையை நீக்கித் தூய்மைப் படுத்துகிறது.
** ஓடும் நதி நீரில் துணிகளைத் துவைப்பது சிறந்தது.இயந்திரத்தில் தோய்ப்பதால் ரஜ-தம (தீய சக்தி கொண்ட)
அதிர்வலைகள் அதிகமாக வாய்ப்புள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தெய்வ தரிசனம் எவ்வாறு செய்வது ?
----------------------------------------------
**முதலில் கோபுரக் கலசத்திற்கும் பின் வாயிற்படிக்கும் நமஸ்காரம் செய்யவும்.
**தெய்வ சரணங்கள், மார்பு, கண்களை இவற்றை முறையே தரிசித்துப் பின் நமஸ்காரம் செய்யவும்.
** நாம ஜபத்துடன் பிரதக்ஷிணம் செய்து பூரண சைதன்யத்தைக் (பலனைக்) கிரஹிக்கப் பிரார்த்தனை
செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாலையில் தீய சக்திகள் வீட்டின் உள்ளே புகாமல் பூரண பாதுகாப்புப் பெற !
---------------------------------------------------------------------------------------------
**வாஸ்து சுத்தி ஏற்பட நாம ஜெபத்தோடு, தூபம் காட்டவும். சாத்வீக ஊதுவத்தியைக் காட்டவும்.
** தெய்வம் மற்றும் துளசி முன் தீபம் ஏற்றுவதால், வாஸ்து சுத்தி ஏற்படுகிறது.
**தீபத்திற்கு நமஸ்காரம் செய்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லவும்.
"சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதா
சத்ரு புத்தி விநாசாய தீப ஜோதிர் நமோஸ்துதே! "
-----------------------------------------------------------------------------------------------------------------------------
**தகவல்கள் : சனாதனனின் நூல் "தினசரி காரியங்களும் அதன் சாஸ்திரமும்**
-----------------------------------------------------------------------------------------------------------------------------