சுக்கிரன் குடும்பஸ்தானத்திற்கு அதிபதி

கால புருஷ தத்துவத்திற்கு இரண்டாம் அதிபதியாக வருபவர் சுக்கிரன். அதாவது குடும்பஸ்தானத்திற்கு அவரே அதிபதியாகிறார்.

பெரும்பாலான குடும்பங்களில் இன்று பிரச்சினைகள் அதிகமாகவும் அதனால் மன நிம்மதியின்றி தவிப்பவர்கள் ஏராளம். பொதுவாக பெண்களுக்கு இது சற்றே அதிகம். அப்படிப்பட்ட பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் தங்கள் வீட்டில் காலை மாலை இரு நேரங்களிலும் மஹாலட்சுமி படம் வைத்து விளக்கேற்றி வர சுபிட்சம் பெருகும். மேலும் செவ்வாய் கிழமை அன்று முருகப்பெருமான் கோவிலில் விளக்கேற்றி சிவப்பு நிற உடை அணியுங்கள் கணவரின் அன்பு
கிடைக்கும்.

அருகில் உள்ள அம்மன் கோயிலில் தொடர்ந்து 48 வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் அமைதியும் சந்தோசமும் குடி கொள்ளும். திருமணமாகாத கன்னி பெண்கள் இதை செய்து வர அம்மன் அருளால் நல்ல குடும்பமும் அமையும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (18-Jun-16, 11:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 83

மேலே