விட்டேற்றி

இரண்டாம் வகுப்பில் படிக்கும் சண்முகம் சரிவர பாடத்தை கவனிக்காமல் விட்டேற்றியாக இருப்பதைப் பார்த்த சித்ரா டீச்சர் கேட்டாள்.

சித்ரா டீச்சர்: "ஏய் சண்முகம் என்னாயிற்று உனக்கு? ஏன் பாடங்களை சரிவர கவனிக்க மாட்டேன் என்கிறாய்?

சண்முகம்: "டீச்சர்... என் அக்கா இதே ஸ்கூலில்
நான்காம் வகுப்பு படிக்கிறாள். நான் அவளை விட புத்திசாலி! எனவே, என்னையும் நான்காம் வகுப்பில் போடுங்கள்!

இதைக் கேட்டு கடுப்பான டீச்சர் என்னென்னவோ சமாதானம் சொல்லியும்
சண்முகம் விடாப்பிடியாக தன் பிடியிலேயே நிற்கவும், அவனை தலைமை ஆசிரியரிடம் கூட்டிப் போகிறாள் சித்ரா டீச்சர்.

விவரம் முழுவதையும் கேட்டுக் கொண்ட தலைமை ஆசிரியரும், "சரி... சில கேள்விகள் கேட்கிறேன். சண்முகம் சரியாக பதில் சொல்லி விட்டால் நான்காம் வகுப்பு. இல்லையேல், வாயை மூடிக் கொண்டு இரண்டாம் வகுப்புக்கே போக வேண்டும் என்று சொல்ல,சண்முகமும் ஒத்துக் கொள்கிறான்.

தலைமை ஆசிரியர்: "40+25 எவ்வளவு?"

சண்முகம் [டக்கென்று]: "65 சார்".

தலைமை ஆசிரியர்: வெரி குட். 23 x 6 எத்தனை?

சண்முகம் [சற்று யோசித்து]: "138".

"வெரி குட் சண்முகம்... நீ இப்போது நான்காம் வகுப்புக்குப் போகலாம்" என்று தலைமை ஆசிரியர் சொல்லி முடிப்பதற்குள், "சார்... நான் சில கேள்விகள் கேட்கிறேன்" என்று முந்திக் கொள்கிறாள் சித்ரா டீச்சர்.

சித்ரா டீச்சர்: "பசு மாட்டுக்கு வயிற்றுக்குக்கீழே நான்கு இருக்கிறது. ஆனால், எனக்கு இரண்டு மட்டுமே உள்ளது. அது என்ன?

சண்முகம்: "கால்கள்".

வியர்க்கத் தொடங்கியிருந்த தலைமை ஆசிரியர் சற்று ஆசுவாசப்பட, அதற்குள் அடுத்த கேள்வியைக் கேட்கிறாள் டீச்சர்.

சித்ரா டீச்சர்: "மனிதர்கள் வீட்டுக்குள் கதவடைத்துக் கொண்டு செய்வார்கள். நாய் நடுத்தெருவில் செய்யும். அது என்ன?"

சண்முகம்: "சாப்பிடுவது".

தலைமை ஆசிரியர் தடுக்க முனைவதற்குள் டீச்சர் தொடர்கிறாள்.

சித்ரா டீச்சர்: "ஆண் நின்று கொண்டும், பெண்
உட்கார்ந்து கொண்டும், நாய் மூன்று கால்களிலும் செய்வது என்ன?"

சண்முகம்: "கை குலுக்குவது".

முகமெல்லாம் வியர்வை ஊற்றாக வழிய,
டென்ஷனாகி விட்ட தலைமை ஆசிரியர் என்ன செய்வதென்றே புரியாது உட்கார்ந்திருக்க, சண்முகம் முழுவேகத்தில் பதிலளிக்கத்
தொடங்கியிருந்தான்.

சித்ரா டீச்சர்: "உன் ஜட்டிக்குள் நீளமாக உருண்டை வடிவில் இருக்கிறது. ஆனால், என் ஜட்டிக்குள் இல்லை. அது என்ன?"

சண்முகம் [அரைஞாண் கயிற்றை தடவிப்பார்த்துக் கொண்டு]: "தாயத்து".

சித்ரா டீச்சர்: "வாய்க்குள்ளே போகும்போது கடினமாக, பிங்க் ரோஸ் நிறத்தில் கெட்டியாக இருக்கும். ஆனால், வாயிலிருந்து வெளியே வரும்போது மென்மையாகி, கொழகொழப்பாக இருக்கும். அது என்ன?"

சண்முகம்: "பபுள்கம்".

சற்றும் சளைக்காமல் சண்முகம் பதில் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்த சித்ரா டீச்சர், "சரி... இப்போது வேறு வகையில், 'நான் யார்' என்ற கேள்விகள் கேட்கிறேன்" என்று சொல்ல, சண்முகமும் சம்மதிக்கிறான்.

சித்ரா டீச்சர்: "எனக்குள் உருண்டு, திரண்டு, பருத்து நீண்டிருக்கும் கடினமான தடியை அடித்து இறக்குவார்கள். நீ ஈரமாவதற்குள் நான் ஈரமாகி விடுவேன். நான் யார்?"

சண்முகம்: "கூடாரம்".

டென்ஷனாகி விட்ட தலைமை ஆசிரியர் தடுக்கப் பார்க்க, அதற்குள் டீச்சர் அடுத்த கேள்வியை தொடங்கி விடுகிறாள்.

சித்ரா டீச்சர்: "என் முதல் எழுத்து 'பு'. கடைசி எழுத்து 'டை'. என்னை சிலர் வாயில் வைத்து உறிஞ்சி, நாக்கால் நக்கிப் பார்ப்பார்கள். நான் யார்?"

சண்முகம்: "புளியங்கொட்டை".

இப்போது சண்முகம் தைரியம் பெற்று பதிலளிக்கத் தொடங்கி விட்டிருக்க, டீச்சர் தொடர்கிறாள்.

சித்ரா டீச்சர்: "என் நீள, அகலம் மனிதருக்கு மனிதர் வேறுபடும். நான் பல சைஸ்களில் இருப்பேன். சில நேரங்களில் நான் ஒழுகுவேன். என்னை
உறிஞ்சும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நான் யார்?"

சண்முகம்: "மூக்கு".

சித்ரா டீச்சர்: "நான் நீளமாக, உருண்டு பருத்து,கடினமாக இருப்பேன். என் முனை, குத்திக்கிழித்துக் கொண்டு நுழையும் கிளம்பும்போது, நான் துடித்துக் கொண்டு கிளம்புவேன். நான் யார்?"

சண்முகம்: "அம்பு".
எல்லா கேள்விகளுக்கும் சர்வ சாதாரணமாக சண்முகம் பதிலளித்ததும், நீளமாக ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் அடைந்த தலைமை ஆசிரியர், பைலை மூடி வைத்து விட்டு சொல்கிறார்:

"சண்முகத்தை எட்டாம் வகுப்பில் போடுங்கள்.
கடைசி ஐந்து கேள்விகளில் நானே ஆடிப்போய்விட்டேன்!!!!".

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (19-Jun-16, 12:39 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 105

சிறந்த நகைச்சுவைகள்

மேலே