குளியலறையில் கரப்பான்
குளியலறையில் கரப்பான் ..
கணவன் அருகில் படுத்திருந்த கவிதா காலை நேரம் கண் விழிக்க, தன் உடலில் போர்த்தியிருந்த போர்வையை அகன்றி கணவன் மீது போர்த்திவிட்டு, சோஃபா மீதிருந்த அவள் கைபேசி எடுத்துப் பார்த்தாள்.
ஆறு மணி ஆவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் பாக்கியிருந்தன. ஆறு மணி ஆகிவிட்டால் அலாரம் அடித்திருக்கும். அலாரம் அடித்துவிட்டால் அவளுடன் கார்த்திக்கும் எழுந்து விடுவான் என்பதால் கைபேசியில் அலாரம் அடிப்பதை நிறுத்திவிட்டு, கைபேசியை மீண்டும் சோஃபாவில் வைத்துவிட்டு, பல் விளக்கி, முகத்தை தன் புடவை முந்தானையால் துடைத்தவாறே பூஜை அறைக்குள் நுழைந்து, விளக்கேற்றி வைத்து, ஸ்ரீ ராமன் பட்டாபிஷேகப் படத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு, கமகமவென்று மணக்கும் சைக்கிள் பிராண்டு ஊதுவத்தி ஒன்றை ஏற்றிவைத்துவிட்டு, சமையல் அறைக்குள் பிரவேசித்தாள்.
எவர்சில்வர் பாத்திரத்தில் ஃபிரிட்ஜில் இருக்கும் ஆவின் பாலை எடுத்து அதில் ஊற்றி கேஸ் அடுப்பைப் பற்றவைத்து, முன்தின இரவில் படுக்கச் செல்லும்முன் காஃபி டிக்காக்க்ஷன் ஏற்கனவே போட்டு வைத்திருந்ததிலிருந்து இரண்டு கோப்பைகளில் டிக்காக்க்ஷனை அளவோடு ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் வீதம் சீனியையும் சேர்த்துவிட்டு , பால் பொங்கிவரக் காத்திருந்து, கேசை அனைத்து விட்டு, அகப்பையால் ஒரு கோப்பையில் பாலூற்றவும், சமையல் அறையில் எங்கும் காஃபியின் நறுமணம் நிறைந்தது. மெதுவாக காஃபீயை பருகிவிட்டு, கோப்பையை சமையலறையில் இருக்கும் குழாயில் கழுவி வைத்துவிட்டு, மற்ற கோப்பையில் கணவனுக்கு காஃபி எடுத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழையவும், அவள் கணவன் முகம் கழுவி, பல் துலக்கி அருகில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்திருப்பதை கண்டுகொண்டாள்.
"குட் மானிங்" என்று சொல்லிக் காஃபியை அவள் நீட்டியபோது, கையில் அணிந்திருந்த கணமான பொன்வலையல்கல் இரண்டும் மோதிக்கொள்ள, அந்த அறைக்குள் ஒருவித இன்ப அலைகள் எழுந்தன. பூஜையறையில் ஏற்றிவைத்திருந்த ஊதுவத்தியின் மணம் ஏற்கனவே காற்றில் கலந்து அவர்கள் படுக்கையறைப் பக்கம் வந்த்துசெர்ந்திருக்க, காஃபியின் மணமும் அங்கு கலந்துகொன்டாது.
"குட் மானிங்" என்று சொல்லிக்கொண்டே காஃபீயை கணவன் பெற்றுக்கொண்டதும், கவிதா, "நான் குளிச்சுட்டு வரேன்" என்று சொல்லி, அலமாரியில் இருந்து குளித்துவிட்டு மாற்றிக்கொள்ள உடைகள் எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் இருக்கும் குளியறைக்குள் பிரவேசித்தாள். கவிதாவின் கணவன் அவனது கைபேசியில் எதையோ பார்த்தவண்ணம் கவிதா கொடுத்த காஃபீயை மெல்ல மெல்ல பருகத்தொடங்கினான்.
குளியறையில் பிரவேசித்த கவிதா, உடுத்தியிருந்த புடவை, ஜாக்கெட் இரண்டையும் கழற்றி, அருகில் இருக்கும் பக்கெட்டிற்குள் போட்டு விட்டு, தன் இரு கைகளையும் பின்புறமாக வைத்து, அவள் அணிந்திருந்த பிராவின் இரண்டு ஹுக்குகளில் ஒன்றை கழற்றிவிட்டு, மற்ற ஹுக்கைக் கழற்றும் சமயம், எதேச்சையாக அவளுக்குத் தெரியாமல் அங்கு ஒளிந்திருந்து அவள் அழகைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கும் கரப்பான் பூச்சியை அவள் கண்கள் கண்டதும், "வீல்" என்று கூச்சலிட்டாள். அவளிட்ட கூச்சலில் குளியலறை மட்டுமின்றி, அவள் கணவன் அமர்ந்திருக்கும் படுக்கையறைக்குள்ளிலும் நன்றாகவே கேட்டது.
"என்னாச்சு .. கவிதா" என்று கேட்டவாறே கவிதாவின் கணவன் குளியறைக் கதவைத் தட்டினான்.
உள்ளிருந்த கவிதாவிற்கு பயத்தின் விளைவாய் அவள் நாவால் கரப்பான் பூச்சி என்று சொல்லக்கூட வரவவிலை.
படபடவென்று கவிதாவின் கணவன் கதவைதட்ட, உள்ள ஒரு கரப்பான் பூச்சி இருக்குன்னு எப்படியோ சொல்லிமுடித்துவிட்டாள்.
"ச்சே இவ்வளவுதானா .. நான் ஏதோன்னு பயந்துவிட்டேன், சரி கதவைத் திற .. நான் வந்து அதை கொன்னுடறேன்" என்று சொல்லவும், குளியலறைக் கதவு திறந்தது.
உள்ளே நுழைந்த கவிதாவின் கணவன், "எங்கே கரப்பான் பூச்சி" என்று கேட்கவும், "அதோ" .. என்று கையை நீட்டி "அடிங்கோ .. அடிங்கோ" என்று ஒரு கோடியை சுட்டிக் காட்டினாள்.
குனிந்து பார்த்த அவள் கணவன், "அடி அசடே .. இது செத்துப்போன கரப்பான் பூச்சி. இதைக் கண்டா நீ இப்படி நாலு வீடுகளுக்குக் கேட்கும்படிக்கி கூச்சலிட்டே" என்றான்.
அதைக் கேட்டதும், அவள் முகத்தில் சற்று மாறுதல் வருவதை அவன் உணர்ந்துகொள்ளும் அதேநேரம் அவள் கண்கள் அவள் பிரா ஒருபக்கம் சற்று இறங்கியிருப்பதையும், அதற்குள் மறைந்திருக்கும் அழகின் ஓர் பெரும் பகுதியை கண்டுகொண்டன. அவனுள்ளில் உடனே ஒரு உத்வேகம் தொற்றிக்கொள்ள, அவன் அவளை நெருங்கி அவள் இடையில் கையை வைத்ததும், கணவனைத் தடுத்து நிறுத்தி, "என்னங்க இது .. நேரங்காலம் தெரியாம இப்ப போயி" என்றாள்.
"கல்யாணம் என்று நடந்து விட்டால் எல்லா நேரமும் நல்ல நேரந்தான்" என்று சொல்லி அவள் இதழ்கைத் தீண்டும் முன், "நீங்க வெளில போய் அந்த பெரிய டர்க்கி டவலைக் கொண்டுவாங்க. அவசரத்துல நான் கொண்டுவர மறந்துட்டேன்". " என்றாள்.
"ஓ பேஷா" .. என்று சொல்லி அவள் வெளியேறவும், கவிதா கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.
டவலைக் கொண்டு வந்த கார்த்திக் பலமுறைக் கதவைத் திறக்கச் சொல்லியும் கவிதா கதவைத் திறக்கவில்லை.