பொம்மை

பொம்மை

பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
திரும்ப கிடைத்த பொம்மை
ஆனால் தொலைந்து போன பழைய பொம்மை
என்னை பொம்மையாக்கிய பொம்மை

பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
என்றோ பிடித்த பொம்மை
எதிர்பாராமல் கிடைத்த பொம்மை
நான்கு சுவற்றிற்குள் பேசிய பொம்மை
நால்வர் மத்தியில் பேசாது கொன்ற பொம்மை
நான் தெரிந்தே தொலைக்கும் வரை
உண்மையில் அதுதான் நிஜ பொம்மை

பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
கெட்டவர் கைகளில் நித்தமும் பொம்மை
கேளார் செவிகளில் பேசிடும் பொம்மை
கேட்பாரற்று கிடக்கும் பொம்மை
கேட்டதால் கெட்ட கெட்ட பொம்மை
மற்றவர் கண்களில் காதல் பொம்மை
என் கண்களில் காலத்தால் பொம்மை

பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
எதிர் காலம் தொலைத்த நிகழ்கால பொம்மை
எதிர்ச்சொல் தெரிந்த நல்லவன் பொம்மை
கெட்டவனாய் வாழ்பவன் உள்ளுக்குள் புத்த பொம்மை
புத்தனாய் வாழ்பவன் உண்மையில் பித்த பொம்மை
நல்லவன் போர்வையில் வாழ்வதே பொம்மை
நடப்பதெல்லாம் நன்மையென்று நினைப்பதே பொம்மை
கடவுளைக் காக்க அழைப்பவன் பொம்மை
கடவுளையே பொம்மையாய் படைத்தவன் பொம்மை
கடவுள் இல்லை என்பவனும் பொம்மை
கடவுளைக் காட்டத்தவருபவனும் பொம்மை
தெருவெல்லாம் கடவுளை விதைத்தவன் பொம்மை
விதைத்ததை மதமென்று அழைத்தவன் பொம்மை
அழைத்ததை மதிகெட்டுத் தழுவியவன் பொம்மை
தழுவியதை தரம்கெட்டு மாற்றியவன் பொம்மை
மாற்றியதை சரியென்று சொல்பவன் பொம்மை
சொல்லியதெல்லாம் கேட்டிருந்தால் நல்ல பொம்மை
மனம் சொல்லியதைக் கேட்டதால் கெட்ட பொம்மை
அன்று எல்லார்க்கும் பிடித்த பொம்மை
இன்று எவர்க்கும் புடிக்காத பொம்மை
உண்மையை தெரியத்துடிக்கும் ஆயிரம் பொம்மை
உண்மையில் வருடம் நாற்பதை பின்னே புரட்டினால்
நீ இதில் எந்த பொம்மை???????????????????????

எழுதியவர் : ஜெகன்.த (19-Jun-16, 8:53 pm)
Tanglish : pommai
பார்வை : 155

மேலே