புறக்கணிப்பு-கவிதை
புறக்கணிப்பு
பாதை ஒன்றை வகுத்திட்டால்
-----பயனம் தன்னால் உருவாகும்!
தீயதை நெஞ்சம் புறக்கணித்தால்
-------நேர்மை வழிகள் தெரிந்திடுமே!
சாதனைப் புரிந்திட வேண்டிடின்
------சோதனை தன்னை புறக்கணிப்போம்!
வெற்றிகள் நம்மைச் சேர்ந்திட
--------வீணாய் புலம்புவதை புறக்கணிப்போம்!
ஆண்டவன் அருளும் கிடைத்திடவே
-------ஆணவம், அகந்தை புறக்கணிப்போம்!
ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கே
------ஆமையின் நடையை புறக்கணிப்போம்!
சீராய் செல்வம் சேந்திடவே
---------சோம்பலாய் இருப்பதை புறக்கணிப்போம்
தேவைக்கு மேலே சேர்ப்பதையே
---------துணிந்து நாமும் புறக்கணித்தால்
தூக்கம் இனிதாய் வந்திடுமே!
---------தொல்லைகள் எல்லாம் தொலைந்திடுமே!
நன்றி- தினமணி
----கே. அசோகன்