பொய் முகங்கள்
மெய்யை பொய்யாய்
திரிக்கும் போது
கொஞ்சம் யூகிக்கனும்
பொய்யை மெய்யாய்
திரிக்கும் போது
நிறைய யோசிக்கனும்
மெய்யிலே பொய்யையும்
பொய்யிலே மெய்யையும்
கலக்கும் போது
அடக்கி வாசிக்கனும்
மெய் குடியிருக்கும் கோயிலோ
நியாய ஆலயம்
பொய் குடியிருக்கும் வாயிலோ
அநியாய சமாதி
பொய் பாயும் போது
மெய் மறைந்திருக்கும்
மெய் பாயும் போது
பொய் ஓய்ந்திருக்கும்