மனிதன் வாழ்ந்தான்

சேர செல்வம் சேரும்
காலம் நேரம் கூடும்
செல்வம் தேட ஓடும் நம்மை
தேவை அதிகம் தேடும்,
ஓடும் நம்மை விரட்டும் முயற்சி
முன்னால் பாய்ந்து செல்லும்,
சோம்பல் இல்லா உணர்வு
சோர்வு இல்லா உயர்வு
மேன்மை நிறைந்த வாழ்க்கை
மனிதன் இவனே இவனே என்றும்
எழுச்சி கூவி உயர்த்தும் ,
மெதுவாய் மெதுவாய் மெதுவாய்
மோதும் தடைகள் தாண்டி
முயன்று சென்றால் மனிதன்
இயலும் நம்மால் இயலும் என்று
இடைஞ்சல் இன்றி வாழ்ந்து
இயன்றவரை இன்பம் இதுவே
என்று மட்டும் புரிந்து விடு,
செல்வம் தேட தேட புகழும்
உன்னை நாடி வரும்
நாட்டில் அயலான் பசி கண்டு
துவண்டு தர்மம் கொடுத்து விடு
தேவை உள்ள மனிதன்
உன்னை நாடும் விதத்தில் நடந்து விடு ,
பெருமை பொறாமை இரண்டும் துறந்து
பொறுமை பண்பு அன்பு கொண்டு
வாழ்ந்திட நீயும் வாழ்ந்திடுவாய்
வாழ்த்த உன்னை பல பேர்கள்
வரம் பல நீயும் பெற்றிடுவாய்,
அவன்தான் மனிதன் என்றுன்னை
வாழ்த்த வாழ்த்த நெஞ்சம் நிறைந்து
நிம்மதி பெற்று மகிழ்ந்திடுவாய்
உழைப்பின் பயனால் அடைந்திட்ட
உவகையும் ஊக்கமும் உன்னிடத்தில்
ஊன்றும் உயர்வை விடா முயற்சியால்
உழைத்து உழைத்து சேர்த்து விடு
சேர்த்து தர்மமும் செய்து விடு
மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு
சான்று நீயாய் வாழ்ந்து விடு

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Jun-16, 5:06 pm)
பார்வை : 177

மேலே