தந்தையர்க்கு ஒரு நல்வாழ்த்து

பத்து மாதம் சுமந்து

குழந்தையை ஈன்று

தருபவள் தாய்

அந்த குழந்தைக்கு

முகவரி தருபவன்

தந்தை ஒருவனே

குழந்தை பிறப்பு சான்றிதழ்

பள்ளி சேர் விண்ணப்பம்

அதன் பின்னே வெளி நாடு செல்ல

பாஸ்போர்ட் என்ற கடவுசிட்டு

மற்றும் திருமண பதிவுச் சான்று

இவைக்கெல்லாம் தந்தைப் பெயரே

இன்றி அமையாததொன்று

நல்லதோர் தந்தை

குழந்தைக்கு அமைந்திட

அக்குழந்தை நாளைய

இனிய குடிமகனாய்

நல்லோர் போற்றும்

நாயகனாய் வளர்வான்

தங்கமாய் மிளிர்வான்

பாசமும் பொறுப்புமுள்ள தந்தை

அவன் குழந்தைக்கு என்றும்

இன்றி அமையா துருவ நட்சத்திரம்


தாயையே எப்போதும் போற்றி

துதிக்கும் நாம் இன்று

தந்தைக்கே உரித்தான நன்னாளில்

நமக்கெல்லாம் முகவரி தந்த

நமது இனிய தந்தையரையும்

சற்றே போற்றிடுவோம் வாழ்த்திடுவோம்

நல்லாசி பெற்றிடுவோம் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jun-16, 4:28 pm)
பார்வை : 83

மேலே