நான் மீண்டும் தனிமையில்

சாரலின் தூரலில்
ஒரு சாயந்திர வேளையில்
ஆதவனின் மஞ்சள் நிறப் பொழிவினில்
நான்நி ன்றிருந்த போது
ஏன் என் அருகில் வந்தாய்
என் தனிமையை கலைத்தாய் ?
சாயந்திர ராகங்களை மீட்டிவிட்டு
எங்கு மறைந்து சென்றாய் ?
ராகங்களின் சலனங்கள் நெஞ்சினில்
நான் மீண்டும் தனிமையில் !

----கவின் சாரலின்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-16, 9:40 am)
பார்வை : 122

மேலே