பரிவுடன் அணைத்து இருப்பதுவே சுகம்

மஞ்சள் வெயில்
.....மாலையிலே
நிலவை வரவேற்று
.....ஆதவன்
ஓய்வெடுக்கச் செல்லும்
.....வேளையில்
என் காதல் தலைவனின்
.....நெஞ்சில்
தலை வைத்துக் கண்மூடி
.....மயங்குகிறேன்!

மெள்ள மெள்ள
.....உறக்கத்திற்குச் செல்கிறேன்,
தலைவனின் மூச்சுக் காற்று
.....அவர் நெஞ்சை
மஞ்சமாக்கி என்னைத்
.....தாலாட்டுகிறது!
கனவுகள் தேவையில்லை
.....எனக்கு - என்னைப்
பரிவுடன் அவர் அணைத்து
.....இருப்பதுவே சுகம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-16, 10:32 am)
பார்வை : 272

மேலே