கதைக்கும் கவிதைக்கும் காதல்

அவன் ; இனிமை
----------
அழகான அமைதியான இயற்கை அழகுகள் நிறைந்த சூழலில் வாழ்கிறான் .ஒரு புறம் கடல் .
வாழ்வாதாரமாக விவசாயம் . வீட்டுக்கு முதல் மகன் . அவனுக்கு கீழ் இரண்டு தங்கை ஒரு தம்பி .
அன்பான அம்மா அப்பா . உறவுக்கு சூழ்ந்துள்ள உறவுகள் . தோள் கொடுக்கும் உயிர் நண்பர்கள் .
படித்த படிப்புக்கு ஒரு வேலை . வேலை நேரம் மீதியில் விவசாயம் . இப்படி இன்பமான சூழலில்
வாழும் " இனிமை " வாழ்க்கையில் நடக்கப்போகும் வாழ்க்கை எண்ணங்களை பகிரப்போகிறேன்
அவன் வாழும் கிராமத்தில் .அவன் நண்பனின் அக்காவின் திருமணத்துக்கு வந்தாள் .முற்றிலும்
நகரப்புறத்தில் பிறந்து வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் "வின்னியா " என்ற
அழகு தேவதை . அவள் வாழும் இடம் தான் நகரம் .ஆனால் வாழ்க்கை முறையில் கிராமிய
காற்றும் அடிக்க தான் செய்கிறது . இந்த இரட்டை வாடை அடிக்கும் இவளுக்கும் .கிராமிய வாடை
கொண்ட இவனுக்கும் எப்படி காதல் வந்தது . என்ன நடைபெறப்போகிறது என்பதை
தொடர்ந்து பார்ப்போம் . இது தொடர் பதிவுதான் என்றாலும் .ஒவ்வொரு பதிவும் முற்று பெறும் .

அவள் ;வின்னியா
---------

மெல்லியதாய் பூசிய ......
உதட்டு சாயம் - வானவில்
நெற்றியில் வளைந்து ....
இருப்பதுபோல் அவள் ....
புருவம் ........!!!

அவள் பருவமோ ....
அழகிலும் அழகு .....
அழகிய பூமரத்தில் ....
பூத்து குளுங்கும் பூவை ....
போல் சிரித்த முகம் ....
கொஞ்சம் வெட்கம் ...
நிறைய துடுதுடுப்பு .....!!!

&

இத்தனை குணங்களை கொண்ட ...
இருவரின் காதல் பயணம் தொடரப்போகிறது ..

&

எனது சிந்தனைகளில் ஒன்று . கதையையும் கவிதையையும் காதலையும் இணைத்து
ஒரு தொடர் பதிவாக எழுதப்போகிறேன் . அவன் சிந்தனைகளை கதையாகவும் .அவள் சிந்தனைகளை
கவிதையாகவும் வடிவமைக்கப்போகிறேன் . உங்கள் ஆதரவுக்கு நன்றி
என்றும் இனிமையுடன்

கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Jun-16, 10:37 am)
பார்வை : 60

மேலே