வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில்
எனக்கு ஒன்னு
ஆனதுன
உனக்கு வேற
பிள்ளையுண்டு ....
உனக்கு ஒன்னு
ஆனதுன
எனக்கு வேற
தாய் இருக்கா....
வைரமுத்து வரிகள்
வலியாக நெஞ்சை
வருடியது ...
இன்று வலி
இருந்த போதும்
சுகமா இருக்கிறது ....
அம்மா நீ
என் மகளாக
பிறந்ததால்...
தங்கமன,
வைரமன,
சீராட் டுவேன் ...
என் வேண்டுகோலாக
எனக்கு மகனாக
வர வேண்டும்
என் அப்பா....
முதல் வயதில்
நான் உன்னை
கண்டு அறியேன்
நான் காணும்
முன்னை நீ
என்னை விட்டு
சென்றாயே....
சீக்கிரம் பிறந்து
வா அப்பா
நீ என் மகனாக ...
நான் காத்திருப்பேன்
உன்னை வளர்க்க
நீங்கள் என்னை விட்டு
பிரிந்தது
கோவம் இல்லை....
எனக்கு தெரியும்
பிறந்தவர் இறப்பதும்
மாண்டவர் பிறப்பதும்
இயற்கை தான் என்று ....
கவலை மாறும்
சந்தோசம் மாறும்
வாழ்க்கை என்னும்
நீரோட்டதில்
சேற்று போல்
தங்கி விடாதே
நதி போல்
ஓடிக்கொண்டு இரு
உன் நிலை
கண்டிப்பாக மாறும்