வயல்வெளிகளில் நாங்கள் வரும்பொழுது
ஒருநாள் நானும்
.....என் காதலியும்
வயல்வெளிகளில்
.....வரும்பொழுது
வேலியிலும்
.....பாறைகளிலும்
வளர்ந்திருந்த
.....காட்டுச்செடிகள்
தங்களுக்குள்
.....பேசிக் கொண்டன!
ஓ’ யாரிவர்கள்?
.....தழுவிக் கொண்டும்
முத்தங்கள்
.....பரிமாறிக் கொண்டும்..!
கிராமத்துக் காதலனும்
.....அவன் மனம்
கவர்ந்த கன்னியுமா!
.....காதலர்கள்
இருவரும் மணம்
.....முடித்தவர்கள் அல்லவா!
வெண்ணிலாவும்
.....வானும் போல
கருத்து ஒருமித்து
.....காதலர் இருவரும்
கணவன் மனைவியாய்
.....இன்று போல
என்றும் இனிது
.....மகிழ்வுடன் வாழ்ந்து
செல்வம் பதினாறும்
.....பெற வாழ்த்துவோம்!