நன்றி பாக்யா வார இதழ் அட்டைப்படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி
நன்றி பாக்யா வார இதழ் !
அட்டைப்படத்திற்கு கவிதை !
கவிஞர் இரா .இரவி !
பாரதி கண்ட புதுமைப்பெண்
பாம்புக்கு அஞ்சாத வீரப்பெண்
பரவசத்துடன் சிரிக்கிறாள் !
பாம்பின் விசம் அறியாது
பாவை கை நீட்டுகிறாள்
கொத்தினால் உறுதி மரணம் !
இதுக்குப் போய் பயப்படலாமா
பல் பிடுங்கிய
பாம்பு !
பாம்பு வித்தைக் காட்ட
பாவையும்
வந்து விட்டாளோ ?
ஆனந்தத்தில் குதிக்கும் பெண்
அருவியில் குளிக்கும் பாம்பு
பாவை பாம்பு கவனம் !
.