குளமான கண்கள்

பிடித்த இசையில் இலயித்திட முடியாது
அயர்ச்சியில் கால்கள் நீட்டி துயில்
முடியாது
அலைபேசியில் எவரிடமும் அளவளாவ முடியாது
வண்ணத் தொலைக்காட்சி கட்டுப்பாட்டில் இல்லை
எண்ணங்கள் குவிக்கும் எண்ணமும் தவிடுபொடி
வைத்த இடத்தில் வைத்தவை இன்றி
அடுக்கி வைத்தவைகளை அலங்கோலப்படுத்தி
கவலையின்றி கவனமுமின்றி உடைபடும் பொருட்கள்
அனைத்தும் கோடை விடுமுறையை குளிர்ச்சியாக்கின
உடைபட காத்திருப்பவையோ மெளனமாக அழுகின்றன பள்ளி சென்ற பிள்ளைகளை நினைத்து

வெறிச்சிட்ட வீட்டில் அலைபேசியோ அணிவகுத்த இசையோ வண்ணமோ எண்ணமோ எவற்றிலும் ஈடுபாடின்றி கண்கள் குளமாகின்றன கண்மணிகளே அடுத்த விடுமுறை எப்போது? ??

எழுதியவர் : அகராதி (22-Jun-16, 1:16 pm)
பார்வை : 69

மேலே