கண்ணால் கண்டதை மண்ணால் மறை
சொல்லக் கூடாதச் சொல்லை !
சொல்லிட்டதாலே!
சொன்னச் சொல்லாலே
சொன்னோர்குத் தொல்லை !
சொல்லப் போகும் சொல்லை!
சொல்லிவிட எண்ணி!
சொல்ல முடியாது தவிக்கும்
சொல்லாலே மனதுக்குள் தொல்லை!
சொல்லிவிட்டச் சொல்லை!
சொல்லியிருக்கக் கூடாதென!
சொல்லிவிட்டோர்க்கு
சொன்னச் சொல்லாலே தொல்லை!
சொன்னாலும் தொல்லை !
சொல்லாவிடினுந்
தொல்லை!
சொன்னதால் எதிரி மிரட்டல்!
சொல்லாதுவிட மனதின் மிரட்டல் !
சொன்னோர்க்கும் ஆதாயமில்லை !
சொல்லாதார்க்கும் மனகாயமில்லை ! எனில்
சொல்லிலே உண்மை இல்லை !
எங்கேயும் எப்போதும் கண்ணாலே கண்டதை காதாலேக் கேட்டதை
மண்ணாலே மறை ! நண்மை கொள்ளை !