ஆயிசு அதிகம்•••
நாக்கு சொல்கிறது
வயிற்றினிடம் !
ருசியை நான் பார்த்துக் கொள்கிறேன் !
பசியை நீ பார்த்துக்
கொள் என !
கசியும் நயணத்தில்
ஆயிரம் கனவுகளுண்டு !
வசியம் வார்த்தைக்கு கட்டுப்படலாம்
வாழ்க்கைக்கன்று !
புசியும் என்கின்றவர்க்கு
ஆயிசு அதிகத்திலும் அதிகம் !
அறிவீரோ அகிலத்தோரே !