அழகிய தமிழ் மகள்

பட்டு சேலை மினுமினுக்க ..,
பக்கம் மாமன் சேர்ந்திருக்க ..,
எட்டுத்திக்கும் சூரியனோ ...,
என்னவளின் முகம் பார்க்க ..!
கால் கொலுசு இசை பாட ..,
கானக்குயில் கவி பாட ..,,
தாமரை அவள் முகம் பார்த்து ..,
செந்தாமரை மலர்ந்தாலோ ..!
நீரோடையில் அவள் நடக்க ..,
மீன்கள் எல்லாம் மேல் எழும்பும்..,
ஆற்றினிலே அவள் குளிக்க ..,
ஆகாயம் நாணக்கூடும் ..!
வாசலிலே கோலமிட்டால்..,
வண்டினங்கள் வலைவீசும் ..,
கிணற்றடியில் நீர் மோந்தாள் ..,
பல்லுயிர்களுக்கும் கிறுகிறுக்கும் ..!
சேலை கட்டி அவள் வந்தால் ..,
சோலை பூக்களும் காலில் விழும் .
தாவணி பெண்களை பார்க்கையிலே ..,
பாறைக்கும் தாகம் எடுக்கும் .
பின்னல் கூந்தல் ஜரிகையிலே ..,
சாய்ந்த கோபுரமும் ..,
எழுந்து நிற்கும் .
வெள்ளரி பூக்கள் சிரிப்பினிலே ..,
வெண்மேகமும் தோற்றுப்போகும் .
மங்கை அவள் மேனி கண்டு ..,
மஞ்சள் வானும் மயங்கிவிடும் .
மெல்லிய அவள் இடையின் ..,
அழகினிலே ..,
மெல்பர்ன் நகரும் தோற்றுப்போகும் .