நல்ல பணியாளர்

1.வேலை நேரத்தை எக்காரனைத்தைக் கொண்டும் வீணடிக்காதீர்கள்.

2.எல்லா பிரச்சனைகளுக்கும், தீர்வு உண்டு என்பதை முதலில் நம்புங்கள்.

3.ஒருவருடைய பணி அவருடைய திறமைகளின் நிழற்படம்.

4.பணிமூலமே உங்கள் திறமை ஆற்றல், நற்பண்புகள் ஆகியன வெளியுலகத்திற்கு தெரிகின்றன.

5.புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவராக இருங்கள்.

6.உங்கள் பணி நேரம் உங்களுடையது அல்ல, அது உங்களுடைய நிறுவனத்திற்கு சொந்தமான நேரம்.

7.நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் முதலில் அதனை நேசியுங்கள்.

8.நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல,அதனை எப்படி செய்கிறீர்கள் என்பது முக்கியம்.

9.ஈடுபாடு இல்லாமல் செய்கின்ற வேலை, எதுவாகினும் அதில் வெற்றி பெற முடியாது.

10.நீங்கள் திறமைக்கும்,மனநிலைக்கும்,பொருத்தமான வேலையை தேர்ந்துஎடுத்தல் எப்பொழுதும் வெற்றி உங்களுக்குத்தான்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (24-Jun-16, 12:51 pm)
பார்வை : 55

மேலே