வானம் வசப்படும்

மார்கழி மாதத்து நிலவே
வெண் நிலவே!
தினம் இரவில் மட்டும்
என்னோடு சேர்ந்து உறவாடும் நீ
அதிகாலை வேளையில்
என்னை தவிக்க விட்டுபுட்டு
எங்கே நீ ஓடுகிறாய்...

அதிகாலை பனியிலே
என்னை தனியே விட்டுவிட்டு
கோரப்பனியில் நீ அமர்ந்து
கடும் குளிருக்கு அஞ்சாமல்
வாசலில் நீ என்ன செய்கிறாய்?

புள்ளி வைத்து கோலமிடும் மானே
உனக்கு உதவிடத்தான் இருக்கேன் மாமன்

தமிழ் நாடு பண்பாட்டை மறக்காமல்
தமிழர்களின் கலாச்சாரத்தைக் கெடுக்காமல்
அச்சம் மடம் நாணத்தோடு
அழகாய் அற்புதமாய் ஆடிப்பாடும் மயிலே
என் கிராமத்துக் குயிலே
உன்னைக் கண்டால்
எந்த வானம் வசப்படாதிருக்கும்?!

தலைக்கணம் இல்லா இலக்கணம் கொண்ட
அழகிய தமிழ் மகள் நாணத்திற்கு
ஈடு இணை உண்டா?
செவ்விதழில் வடியும்
செந்தேனைக் கொண்டு தா!

நானும் உண்டு கவிஞன் ஆகிறேன்
கண்டு இரசித்து உண்டு சுவைத்து
முத்தமிழை படித்து விண்மீனே
எட்டி நான் பிடிக்கிறேன்
தமிழ் மகள் உன்னை
விடிவெள்ளி கண்ணே!
வெண் நிலாப் பெண்ணே!

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Jun-16, 10:30 pm)
Tanglish : vaanam vasapadum
பார்வை : 172

மேலே