தினம் ஒரு தத்துவ பாட்டு - 20 =144

“நானொரு தனிமனிதன்
எனக்கில்லை பக்கபலங்கள்
துணிவை வளர்த்துக்கொண்டு
எதிர்த்தேன் ஏகபோகங்கள்
எனக்கென ஓர் இராட்சியம் - அதை
எதிர்ப்பவன் சுத்த பூட்ஜியம்
ஒரு செயலில் இறங்கிவிட்டால் - அதன்
முடிவு பணியும் என் காலடியில்..!”

பட்டிணத்து பகட்டினிலே பட்டனே போடாமல்
சுத்திவரும் பெண்களே வெட்கமென்பது என்ன விலையோ ?
நாகரீக மோகத்திலே நடைவுடை பாவனைகள்
மாறுவது இயற்கையே..! அதனால் அநாகரீக தொல்லையே..!

மேல்நாட்டுப் பழக்கத்தை உள்நாட்டில் பரப்புவதால்
நாடு நெறிகெட்டுப் போவதற்கு நாமே நஞ்சிட்டோமே
அடக்கம்தான் அனைத்திலுமே சாலச் சிறந்தது
அதை அவமதிச்சி நடந்தாக்கா நிச்சயம் கெடுதலு

கல்லூரி காலத்தில் எல்லாமே ஜாலிதான்
கல்லூரி முடிச்சாக்கா வேலைதேடும் ஜோலிதான்
வேலைவாய்ப்பு அலுவலகம் வேலையின்றி கிடக்குது
மென்பொருள் கம்பெனிகள் வேலைதந்து உசத்துது

தேர்தல் போர்க்களத்தில் அனைவரும் குதிக்கலாம்
மக்கள் சேவைகளின் மாண்பை மதிக்கலாம்
வெற்றிப் பெற்றோரே வீதிக்கு வாருங்கள்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தாருங்கள்!


ஜனநாயக நாட்டினிலே ஜனங்கள் படும்பாடு - கடும்
அவதிக்கு உள்ளானால் அது ஆள்வோரின் குறைபாடு
பணநாயகம் பேசுமிடத்தில் ஜனநாயகம் தோற்கிறது
ஜனநாயகம் தோற்பதினால் அந்நியாயம் ஜெயிக்கிறது

முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டைப் போடாதீர்
முயன்றவரை முன்னுக்கு கொண்டுவர தயங்காதீர்
இளைஞர் போர்ப்படையே இலவசத்தை நம்பாதே
நாளைய இராட்சியத்தில் உன்பங்கை மறக்காதே

எழுதியவர் : சாய்மாறன் (24-Jun-16, 10:28 pm)
பார்வை : 107

மேலே