சிகப்பு நிழல்
![](https://eluthu.com/images/loading.gif)
இயற்கை எழில் கொஞ்சும் அழகியக் கிராமம். அழைக்கும் குரல் எட்டும் தூரத்தில் ஓடுகள் மேய்ந்தச் சிறிது விசாலமான வீடு. பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்து தன் 27 ஆம் வயதில் கிராமத்திற்கு வந்தது மீண்டும் அந்தக் கால்கள். கரு ஊதா வண்ண அம்பாசிடரிலிருந்து முதல் அடி எடுத்து வைத்ததும் இசை மீட்டும் இடிகளுடன் மின்னல் சிரிக்க மேகம் தூரல் போட்டது. வீட்டினில் நுழைந்து மின்விளக்கினை எறிய விட்டு ஒரு அறையை மட்டும் சுத்தம் செய்து தங்கினான் வீட்டின் வாரிசு நீலக்கண்டன்.
அன்னையிடம் அலைப்பேசியில் தகவல் சொல்லிவிட்டு குடை விரித்துக் கொண்டு கடைக்குச் சென்று ரொட்டித் துண்டுகள் வாங்கினான். மழை முன்பை விட அதிகம் பெய்தது. தேவைப்படும் என்று மெழுகுவத்தி வாங்கிக் கொண்டு வீடு வந்தான் மணி இரவு 7:30 நிமிடத்தைத் தாண்டியது. நண்பன் அலைப்பேசியில் வந்ததும் பேசினான் பத்து நிமிடங்கள் கழிந்தது. அலைப்பேசியும் அதோடு இறந்துப் போனது. மின்விளக்கும் கண் சிமிட்டி அனைந்தது.
பலத்தக் காற்றுடன் சிறு மழை பெய்தது. தன் முன் நிற்கும் ஆள் தெரியாத ஓர் இருட்டில் தட்டுத் தடுமாறி மெழுகுவத்தி ஏற்றி வைத்தான். வாங்கி வந்த ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டு குளிருக்கு இதமாய் வாயிலிருந்து புகைவிட்டான். பயணத்தின் களைப்பில் மஞ்சத்தில் துணி விரித்து தூங்கச் சென்றான். படுத்ததுமே ஆழ்ந்த உறக்கம் மணி பதினொன்றை எட்டியிருந்தது.
இரவா குளிரா வெயிலா மழையா பாட்டு அவனது அலைப்பேசியில் ஒலித்தது. தன்னை அறியாமலே கைகள் அதனை நிறுத்தியது. மீண்டும் பாட்டு ஒலித்ததும் தூக்க கலக்கத்தில் எடுத்தான் நல்லாத் தூங்குறாயா என்ற குரல் , நல்லாத் தூங்குறேம்மா காலையில் பேசலாம் என்று வைத்துவிட்டான். ஏதோ நினைவு வந்து திடிரென்று எழுந்தான் முகத்தின் மிக அருகில் சிகப்பு உருவம் மின்னலாய் வந்து மறைந்தது. உச்சக்கட்டப் பயத்தில் வியர்வையில் குளித்தான். அலைப்பேசியும் இறந்து தான் கிடந்தது.
ஒரு பலத்த சிரிப்புச் சத்தம் கேட்டு நடுங்கியக் கால்கள் தரையில் ஊன்றி நின்றான். சிகப்பு உருவம் அவன் காலடியிலிருந்து வெளி வந்தது. பயந்து ஓட , விடாது உருவமும் துரத்த சுவற்றில் மோதி மயக்கத்தில் விழுந்தான். அடுத்த நாள் இரவு 10:20க்கு கண் விழித்தான். அவனுக்கு இன்னும் பொழுது விடியவில்லை ஆனால் விடிந்து இருண்டது தான் உண்மை. பயத்திலே தூக்கம் தொலைந்து விடியற்காலை நான்கு மணியளவில் தன்னை மீறித் தூங்கினான்.
காலை பத்து மணிக்கு எழுந்து வாகனத்தை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டான். தங்கும் விடுதி அருகில் வாகனத்தை நிறுத்தி விட்டு, அங்குச் சென்று அறை ஒன்றில் குளித்து சாப்பிட்டு மீண்டும் அறையில் உயிர் வந்த அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான் அப்போது தான் புரிந்தது இரண்டு இரவுகள் அந்த வீட்டிலே இருந்தது. தங்கிய அறையும் திடிரென்று இருண்டது மீண்டுமந்த சிரிப்புச் சத்தம் கேட்டு ஈரகுழை நடுங்கியது. மெல்ல அந்தச் சத்தமும் நின்றது. யார் நீ.... யார் நீ.... வெளியில் வா என்று சத்தம் போட்டாலும் பயம் மனதை திண்றுக் கொண்டிருந்தது. மெல்ல சிகப்பு உருவம் தரையில் படர்ந்தது திடிரென்று வேகமாய் முகத்தின் முன் வரவும் தடுமாறி கட்டிலில் சாய்ந்தான். யார் நீ... என்றான். இப்பொழுது அதுவும் பேசியது நீ எங்குச் சென்றாலும் உன்னைத் தொடர்வேன். உன் செய்கையால் விளைந்தவன் என்றுக் கூறியது.
அவனுக்கோ ஒன்றும் புரியாது மீண்டும் கேட்டான். நீ செய்தப் பாவத்தில் விளைந்தவன் நான். உன்னை உயிரோடு விடப் போவதில்லை என்றது. அவனோ நான் செய்த விண்மீன் போன்ற சிறிய குற்றங்களுக்கு மரணமா என்றான் விண்மீன்களின் எண்ணிக்கையில் பாவங்கள் செய்த நீலக்கண்டன். அந்த உருவம் முகத்தின் மிக அருகில் வந்து குழந்தையைக் கொன்றாலும் கொலை தான், முதியவனைக் கொன்றாலும் கொலை தான் என்றது. அதை உணராது வாதம் செய்தான் நீலக்கண்டன். சிகப்பு உருவம் மிரட்டும் குரலில் அன்று நீ கிராமத்திற்கு செல்லும் வழியில் உயிருக்கு போராடியவனுக்கு உதவியிருந்தால் உயிர் பிழைத்திருப்பான் என்றது. நீலக்கண்டன் செவிகள் அதை கேட்கவேயில்லை. அங்கிருந்து தப்பி ஓடி வாகத்தில் ஏறிச் சென்றான். அவன் அருகிலே சிகப்பு உருவமும் பயணம் செய்தது. உன் உயிரை எடுக்காமல் விட மாட்டேன் என்றது. பயத்தில் வாகனம் உச்சக்கட்ட வேகத்தில் சென்று எந்திரக் கோளாறால் நின்றது. முயற்சி செய்துப் பார்த்தான் முன்னேற்றமில்லை.
அந்த உருவம் சிரிக்க வாகனத்தை விட்டு ஓடினான். தன் கூடவே வரும் சிகப்பு உருவத்தைப் பார்த்தப் படியே ஒடி எதிரே வந்த லாரியில் மோதி தூரமாய் விழுந்தான். சிகப்பு நிழலாய் இரத்தம் உடலை விட்டுச் சிரித்தப் படியே பெருகியது. அதைப் பார்த்துக் கொண்டே அவன் உயிர் பிரிந்தது.....
"பாவங்கள் செய்யாதீர் பரிசுத்தம் ஆவீர்"
.........சுபம்........
சினிமா அறையை விட்டு வெளியே வந்தக் கூட்டத்தில் பதினெட்டு வயதுப் பையன் முதிர்ந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு அவரது மணிப்பரிசைத் திருப்பிக் கொடுத்தான். சிரித்தப் படியே அவரும் சென்றார்.....
உன்னால் செய்ய முடிந்த உதவியை
செய்யாமல் தட்டிக் கழிப்பதும் பாவமே.....
நாம் செய்தப் பாவங்கள் சிகப்பு நிழலாய் தொடரும். மனம் திருந்தி வாழுங்கள் மானிடர்களே..........