என்னுடலும் உன் மனமும் ஊனம்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே !
உன்னை நான் மணந்து கொள்ள
மண நாள் குறித்து விட்டேன்
அதற்கு நீ சம்மதிப்பாய் என்று!
ஆனால் இன்றுதான் கேள்விபட்டேன்
நீ என்னை விட்டு விலகிச்செல்ல
விரும்புகிறாய் என்று !
உன்னைக் கேட்டுத்தானே
காதலித்தேன் நான் அன்று
என் சம்மதம் இல்லாமல் - இன்று
ஏன் பிரிந்தாய் என்னை விட்டு?
ஓ! என்னுடல் ஊனம் என்பதாலா?
உன் மனதிற்கு தெரியாதோ
நானொரு ஊனம் என்பது!