என்ன கொடுமை
ஆறு மணிக்கு எழுந்து
பல்துளக்கி முகம்கழுவி
ஆறரைக்கு பால்வாங்கி
இடையில் சிறிது உடற்பயிற்சி செய்து
ஆறே முக்காலுக்கு குழந்தைக்கு
பாலும் பிஸ்கெட்டும் கொடுத்துவிட்டு
ஏழு மணிக்கு தனக்கும் கணவனுக்கும்
காபியுடன் பிஸ்கெட்டும் கொண்டுவந்து
இரண்டு தம்ளர்களில் ஒன்றைக் கொடுத்துவிட்டு
ஒன்றை தரையில் வைத்துவிட்டு
அமரும் வேளை..
கைத்தட்டி அந்த தம்ளர் காப்பியை
தரை சுவைபார்ப்பது...
என்ன கொடுமை சரவணா....?!??!?