ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும் அது சிவத்தொண்டே
*நமசிவாய வாழ்க*
* பன்றிக்கறியை படைத்து தன் அன்பை வெளிக்காட்டியவர் தான் ஒரு நாயன்மார் ஆனார்
* தான் பிடித்த மீன்களில் உயர்ந்த வகை மீன் ஒன்றை சிவனுக்கு தந்தே தான் ஒரு நாயன்மார் ஆனார் (மீனவர் குலத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்)
* மாட்டின் தோலை உரித்து தோலைக்கொண்டு வாத்தியக்கருவிகள் உண்டாக்கி கோயிலுக்கு இனாமாக கொடுத்தே நந்தனார் நாயன்மார் ஆனார்
* சிவனடியார்கள் உடுத்தும் ஆடைகளை துவைத்து கொடுத்தே ஒருவர் நாயன்மார் ஆனார்
* சிவனடியார்களுக்கு அமுது படைத்தே ஒரு நாயன்மார் ஆனார்
* சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்து உதவியே ஒரு நாயன்மார் ஆனார்
* சிவபெருமான் புகழை பாடியே ஒரு நாயன்மார் ஆனார்
* குங்கிலிய தூபம் போட்டே ஒருவர் நாயன்மார் ஆனார்
*சிவனை தவறாக பேசுபவர்கள் நாக்கை வெட்டியே ஒருவர் நாயன்மார் ஆனார்*
* ஈசனுக்கு பூப்பறித்து போட்டே ஒருவர் நாயன்மார் ஆனார்
ஆக சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும்,நிபந்தனையும் கிடையாது
ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும் அது சிவத்தொண்டே
அன்பர்கள் எப்படி இருந்தாலும் ஈசன் மேல் அன்பாக இருந்தால் அவர் சிவனடியார் தான்
*எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஈசனை நினைந்து உருகி செய்யுங்கள், சிவபெருமானை நினைத்து செய்யும் எந்தவொரு செயலும் சிவனுக்கு மிகவும் பிடிக்கும்.*
தென்னாடுடைய சிவனே போற்றி