கல்லூரியின் முதல் நாள்

கல்லூரி.........................
இந்த ஒரு வார்த்தைக்குள் எத்தனை அழகு எத்தனை இன்பம்.வேலை பளுவில் இருப்பவர்கள் கூட இந்த வார்த்தையை கேட்டால் தங்கள் கல்லூரி வாழ்க்கைக்குள் நுழைந்து விடுவர்.அனைவருக்கும் கல்லூரி என்பது ஓர் நீங்கா நினைவாக தான் இருக்கும்.

பள்ளி மாணவர்கள் கூட பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி வாழ்க்கைக்குள் நுழையும் போது பல கனவுகளோடும் கற்பனைகளோடும் நுழைவார்கள்.அந்த முதல் நாளில் ஏற்பட்ட அனுபவத்தை யாரலும் மறக்க முடியாது.ஒரு புதுவித சுற்றத்தில் புதிய உறவுகள்.அதுவும் அழகான ஓர் உறவு....................நண்பர்கள் என்ற உறவு.ஆனால் அந்த முதல் நாளில் அனைவரும் விசித்திரமாக தென்படுவர்.இருந்தும் மனதில் ஒரு மகிழ்ச்சி.திடீரென பெரியவர்கள் ஆகிவிட்டோம் என்ற உணர்வு.
பன்னிரண்டு ஆண்டு காலமாக சீருடை அணிந்த காலம் மாறி வண்ண உடைக்கு மாறியதில் ஓர் அனந்தம்.கழுதை பொதியை தூக்குவது போல் இத்தனை ஆண்டுகள் புத்தகங்களை தூக்கிய காலம் மாறி கையில் வெறும் இரண்டு புத்தகமும் பையில் ஒரு பேனாவும் எடுத்து செல்வதில் எல்லையற்ற ஆனந்தம்.இப்படிதான் தலைவார வேண்டுமென்று கட்டளையிட்ட காலம் மாறி பிடித்த வகையில் தலையை கோதிக் கொண்டு போவதில் ஒரு மகிழ்ச்சி.

இப்படி ஒவ்வொரு சின்ன செயல்களிலும் ஆனந்தம் அளித்திடும் அந்த முதல் நாளில்.இத்தகைய ஆனந்தத்ததை கல்லூரி சென்ற ஒவ்வொருவரும் கண்டிப்பாக அனுபவித்திருப்பர்.இதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று.ஒவ்வொருவரின் நினைவிலும் ஒட்டிக்கொண்ட ஓர் நாள்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத ஓர் நாள்.

அதுவே கல்லூரியின் முதல் நாள்...........................

எழுதியவர் : புகழ்விழி (27-Jun-16, 2:07 am)
சேர்த்தது : புகழ்விழி
பார்வை : 1994

மேலே