கண்ணதாசன் பாடல்

பொத்திவைத்தக் கற்பனையின் பொருளை எல்லாம்
=பொக்கிசமாய் தன்தெமக்குள் பூக்க விட்டார்
முத்துமுத்தாய் வாழ்க்கையதன் மொட்டு தொட்டு
=முடிவுவரை எழுதியெழுதி முடித்து வைத்தார்
வித்தகமாய் அனுபவித்து விதைத்து வைத்த
=விதைகளென வேர்விட்டு விஞ்சி நிற்கும்
தத்துவத்தின் முகவரிகள் தாங்கி நிற்கும்
=தமிழ்பாடல் வரிகளிலே வாழு கின்றார் .

காதல்ரசம் சொட்டுகின்ற கவிதை செய்து
=கடைசிவரை கவித்திறனைக் காட்டி னாலும்
காதல்தரும் மோதல்களில் கலந்து நிற்கும்
=கண்ணீரில் படகுவிட்டுக் காட்சிக் கேற்ப
பேதலிக்கும் பாத்திரத்தின் பெருமை சேர்க்க
=பெரும்பாலும் தத்துவமாய் பேச வைத்து
சாதலுக்குப் பின்னாலும் சரித்திரம் படைத்து
=சாதனையாய் கண்ணதாசன் வாழு கின்றார்.

எத்தனையோ கவிஞர்கள் எடுத்துச் சொன்ன
=எல்லையற்ற தத்துவங்கள் இருந்த போதும்
அத்தனையும் நம்மனதின் அரங்கம் நின்று
=ஆடவில்லை. ஆடுதுபார் அன்றில் பாட்டால்
தத்துவமாய் சொல்லிவைத்த தங்க வரிகள்.
=தமிழ்த்திரை பாடல்களின் தேரில் ஏறி
முத்திரையைப் பதித்துவிட்ட முத்தை யாவின்
=முத்தான கவிதமிழர் மூச்சாய் நிற்கும்

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Jun-16, 3:52 am)
Tanglish : kannadhaasan paadal
பார்வை : 119

மேலே