தோல்வி தான் தோழி

சின்ன சின்னதாய்
ஆசைகள் கொண்டேன் நெஞ்சிலே...
கொன்றுப் போனதே
விதியும் சதியும் நெஞ்சையே......


வலிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை...
வழிகள் எங்கும் முட்களின் தொல்லை...
எங்கு சென்று தான் இது முடியுமோ?...
என்று தான் என்னிரவு விடியுமோ?......

சின்ன சின்னதாய்......

இன்பம் என்ற ஒன்று
எனக்கு எட்டாக் கனியானது...
பார்க்க முடிகின்றதைத் தவிர
பருகி களிக்க முடியவில்லை......


பந்தப் பாசப் பறவைகள்
மண் நனைந்திடும் முன்னே நின்றிடும்
மழைத் தூரல் போல
பணம் கரைந்ததும் பறந்துச் சென்றனவே......


அண்ணன் தம்பி உறவுகளோ?...
ஆணி வேர் என்றிருந்தேன்...
பாகப் பிரிவின் போதே தெரிந்தது
அது அறுந்துப் போன வேரென்று......


ஆறுதல் தேடி
அன்னை தந்தையின் மடியில்
தாமரை மலராய் இதழ் விரித்தேன்......


அந்த சுகமும் கிட்டவில்லை
உறவுகள் உடைந்த நொடியில்
ஜீவன் இரண்டும் இங்குப் பிரிந்ததே......

சின்ன சின்னதாய்......

வாசல் வரை வந்த தென்றல்
என் மௌனம் கண்டதும்
ஏன் திரும்புதோ?......


வைகை நதியில்
வளையில் ஓசை இல்லையென்றா?...
வார்த்தை அலைகளுக்கு வறுமையென்றா?......


வார்த்தைகளுக்கு பஞ்சம் இல்லை
வந்து வந்து விழுகின்றது
மலை அருவிகளாய்......


முத்து முத்தாய் கோர்த்து
கவிதை மொழியாய் சேர்த்து
காதலைச் சொல்ல
எனக்கு தான் ஒலி இல்லையே......


கண்களோ?...
ஆயிரம் மொழிகளுக்குச் சொந்தம்
அதை அறிந்திட
என் காதலனுக்கு ஒளி இல்லையோ?...
அவனும் எனைப் பிரிந்தானே......


அன்று முதல் இன்று வரை
தோள் பற்றிக் கொண்ட
தோழியாய் கிடைத்தது தோல்வி தான்...
கசங்கியே இருக்கும் கண்களின்
கண்ணீரும் தான்......

சின்ன சின்னதாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (27-Jun-16, 7:50 am)
Tanglish : tholvi thaan thozhi
பார்வை : 760

மேலே