வீர தமிழனே....!!!!

வீறு கொண்டெழுந்த வீர தமிழனே ,
சோதனைகளை கடந்து ,
சாதனைகளை நுகர்ந்து ,
தாய்மண்ணின் மானம் காக்க,
தன்னுயிரை துச்சமென எண்ணி,
பிறறுயிர் காக்கவென ,
தன்னின மானம் காக்கவென ,
மறவர் வழியில் நடந்து,
நீபட்ட பெரும் பாடு யாரறிவார்?


கூரை சரிந்த உனது இல்லமும்,
குருதி படிந்த உன் முற்றமும் ,
நினைக்கையிலே பதைக்குதடா
நீ கடந்த பாதை நினைவினிலே அழியாது ,
நெஞ்சை விட்டகலாது,
அந்த கோர நினைவுகளின் சலனம்,
மறக்குமா????


சொந்த நாட்டினிலே அனாதை என்ற அவலப்பெயர்?
பிறந்த தேசத்திலே பிள்ளைகள் இல்லை,
வளர்ந்த வீட்டினிலே ஆவிகளின் நடமாட்டம்,
எப்போதுதான் தீருமோ எங்களின் ஏக்கம் ??


குட்ட குட்ட குனிந்தது போதும்...!!!!
வீறு கொண்டெழுந்த வேங்கை போல் ,
சீறிப்பாயும் சிறுத்தை போல்,
ஆயிரம் விளக்குடன் எழுந்து நிற்கும் ஆதவன் போலே,
தோல்விகளை கண்டு மிரளாது,
அஞ்சா நெஞ்சுடன்,
விதியை மிஞ்சும் மதியுடன் ,
நாங்கள் வீரத் தமிழரே எனப்பறை சாற்ற
எழுந்து நிற்போம்.............!!!!!!!!!!!!!

எழுதியவர் : kumaresan (23-Jun-11, 12:59 pm)
சேர்த்தது : kumaresan tamilan
பார்வை : 522

சிறந்த கவிதைகள்

மேலே