பத்திரம்

பத்திரமாக இருக்கட்டுமென்று
பத்திரப்படுத்திய பத்திரத்தை
பத்திரமாக எடுத்துப்
பத்திரப்படுத்திக் கொண்டது அது

பத்திரமிழந்த அந்தப்
பத்திரத்தை பத்திரமாக
வைத்திருக்கும் அதன்
பத்திரத்தன்மையை பறித்து அந்தப்
பத்திரத்தை எடுத்துப்
பத்திரப்படுத்திப் அதனையும்
பத்திரமிழக்கச் செய்து
பரிதாபப் படுத்துவதில் உடன்பாடின்றி
அது அதனிடமே பத்திரமாய்
இருக்கட்டுமென்று விட்டுவிடுகிறேன்

பத்திரமாய் இருக்கிறது
மனதில் அந்த எலியின் மகிழ்ச்சி.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Jun-16, 3:18 am)
Tanglish : pathiram
பார்வை : 160

மேலே