பிரியாவிடை

😇My School & My Friends my Teachers😊


ஒரே ஆண்டில்
ஒரே நாளில்
தாய் மடி துயில் கலைத்து
கல்லூரி மடி தலை சாய்த்த
நாமின்று
கல்லூரியில் முதல் தடம் பதித்த
அதே சலிப்போடே
எம் கல்லூரியை விட்டு
அகல்கிறோம்

போய் வருகிறேன்
என் வாழ்வின்
கடைசி நாள் இருக்கையாய் இது
உன்னில்.. கொஞ்ச நேரம் அமர்ந்து கொள்கிறேன்...
அதிக இடைவேளை எடுத்து
பத்திரிகை பார்த்து சத்தமாய் பேசி கேளிக்கையாய் சிரித்த
என் நூலகமே
போய் வருகிறேன்
காற்றோடு போகும் கல்லூரி
மணல் தூசைக் கூட
பிரிய மனமில்லாதவளாய் போகிறேன்.

அழுது கொண்டு வந்த
எங்களை அகிலம் பாராட்ட
அறிவு பகட்டிய என் கல்லூரி ஆசான்களே,
அமைதியின் சின்னமொன்று நீங்கள் தான் என
கல்லூரியைக் காத்து நிற்கும் ஒரு காவலாளியாய்
என் கல்லூரி முதல்வரே
போய் வருகிறேன்
இனி என் பாடசாலை என்னை பழைய மாணவியாய் தான் வரவேற்கும் எனும் வருத்தம் நீங்காதவளாய் போகிறேன்.

என்னோடு கூடியாடி
சடுதியாய் சண்டையிட்டு
என் தோள் சாய்ந்து
கதை பேசிச் சிரித்த என் நண்பர்களே
கல்லூரி வலாகம் எங்கிலும்
நம் கால் தடம் தாங்கா இடமே கிடையாது
நாக மரத்தடி கூட்டம்
அடிக்கடி போய்வரும் "ஹென்டீன்" சுற்றுப்புறம்,
அங்கலாய்த்தபடி அமைதியாய் உணவருந்தும்
நம் வகுப்பு மேசைகள்
எல்லாமே அழுகின்றதாம்
நமக்கே புரியாத பாசையால் நம்மை வழியனுப்ப வாழ்த்துக் கூறி

சுற்றுலாவில் சுறு சுறுப்பிழந்த நாட்கள்
ஆசிரியருடனான முரண்பாடுகள்
ஆண்டுகள் தோரும் நினைவு கோரும்
நம் வகுப்பறை (f)பேன்
சுற்றியுள்ள கம்பியரண்கள்
வகுப்பறையை பிரித்து
நடுவால்
எழுந்த ஒற்றைச் சுவரு
எல்லாமே இனிவரும் காலம் நம்மையே நினைவு கோரும்

சின்னச் சின்ன பிரிவுகளை
ஏற்று வந்த நம் எத்தனையோ விடுமுறை நாட்களில் இல்லாத
புதுவித வலி புரள்கிறது
கண்களுக்குள்
நிறந்தர பிரிவு நாள் இதுவென்றா?.
நண்பர்களே போய் வருகிறேன்
ஒரு நாள் உங்கள் வீட்டு விசேஷத்துக்காய் அழைப்பு
விடுப்பீர்கள் அன்று வருகிறேன்

இழப்புகள் பெரிதல்லதான்
உங்களை இழந்து செல்லும் வரை.
அது இன்றோடே முற்றுப் பெறுகிறது "இழப்புக்கள் பெரிதல்ல"
என்னும் வாசகம்..என்னை விட்டும் .,
இனி மரித்தாலும் இங்கு என் பதின்மூன்று வருட பள்ளி வாழ்வு மீண்டும் வராது என்னும் ஏக்கத்தோடு
போகிறேன் நண்பர்களே
கண்ணீரோடும் புன்னகையோடும்
போகிறேன்
உங்களை விட்டும் உங்கள் நினைவுகளை தேக்கிக் கொண்டு போகிறேன்
போய் வருகிறேன்

என்றும் உங்கள்

அன்பு தோழி
😍முபாறக் பாத்திமா அஸ்க்கியா😍

Advance Level
Arts stream

Eravur
Bt/Bc/Macan Markar Maha Vidyalaya..
2016-06- 02

எழுதியவர் : M.F.Askiya (28-Jun-16, 6:25 am)
Tanglish : piriyavidai
பார்வை : 5504

மேலே