மகிழ்ச்சியலை
கனவுகளில், கற்பனையில் மிதந்து தானே
------------ ஆசையலை தாகமதில் நீந்து கின்றார்
எனதென்றும், எமக்கென்றும் தன்னல ஆசை!
---------தணியாதார் சுயநலமும் அலைகளின் தாகம்
மனமென்னும் கூட்டுக்குள் ஆசையலை தானே!
----------மாளாத துன்பமென புத்தன் சொன்னான்!
குணமென்னும் தேரேறி கும்பிடும் பேருக்கு
---------கடவுளே அருளலை சுரக்க செய்வான்!
பறக்கின்ற பறவைதம் அழகைக் காண்போர்
------------பாங்குடனே மகிழ்ச்சியலை தாக முண்டு!
உறவுகள் ஓடோடி ஒளிகின்ற இந்நாளில்
-----------உதவிடும் நண்பர்தம் உதவியலை தாகம்!
சிறகதன் மென்மையாய் சீராட்டி கொஞ்சு கின்ற
----------சீர்மிகு அன்னையின் அன்பலை தாகம்!
புறம்பேசி, பொய்பேசி திரிவோ ரெல்லாம்
------------பேராசை தாக்கம்தான் அலைகளின் தாகம்!
வாடுகின்ற பயிர்களிடை வாஞ்சை யுடன்
----------வள்ளலார் வழங்கியதே அருளலை தாகம்!
கூடுகின்ற கூட்டத்திடை, கொள்கை என்றே
-----------கூட்டத்தினை சேர்த்தால் மக்களலை தாகம்!
நாடுதான் என்செய்ததென எண்ணி டாமல்
------------ நாடுகின்ற உத்தமருக்கோ நல்லலை தாகம்!
வீடுதான் உலகமென , வாழ்ந்தே வரும்
---------வீட்டரசிதன் வாழ்வே பொறுப்பலை தாகம்!
புத்தனுக்குள் இருந்தனவே ஞான-அலை தாகம்
----------பொங்கித்தான் வழிந்ததுபார் உலகமுய்ய!
சித்தர்கள் தம்மை தாம்மறந்து மௌன மாய்
-----------செய்திட்ட தவஅலையே கோவிலாகும்!
நித்தமும் நம்பிக்கைக் கொண்ட பேருக்கு
------------மகிழ்ச்சியலை தாகமே என்றும் பொங்கும்!
புத்தகம் பயில்வோரின் ஆசை யெலாம்
-------- பல்கித்தான் பெருகுதுபார் அறிவலை தாகம்!
------ கே. அசோகன்.

