அழகும் அவள்தான் உலகும் அவள்தான்

நிலத்தில் தெறித்து விழும்
சில்லரை காசு போல்
அவளின் சிரிபொலி
நெஞ்சின் ஒளியில்
ஒரு அழகு

குறுந்தொகையில்
அவள் குழலும் அழகு
என் அருகில் நிற்கும்
அவள் நிழலும்
மனதில் சுழலும்
ஒரு அழகு

சுவாசக் குழாயில்
மாட்டிய சளிபோல்
வேதனைதரும்
அவள் விழியும்
கன்னக் குழியம்
ஒரு அழகு

அனைத்தும் அவள்தான்
எனை அணைக்கும்
நினைவும் அழகு
இனி சில அழகு
உன விழி
புலியாய் பாயுதே
நெஞ்சே
உயிரில் காதல்
நகங்கள் கீறி இரத்தம்
சிந்துதே

உச்சி வெயிலினில்
பட்டப் பகளினில்
உடலில் வெப்பம்
தொட்டுப் படுகையில்
வியர்வை
கொட்டிப்பறப்பதை
அறிவேணோ

குளிர் காற்று
இரவினில் நடுநிசியில்
உன் நினைவுகள்
எழுந்து நடப்பதை
புரிவாயோ

அம்மன் கோயில்
மணலின் கல்கள் புதைத்து இருக்கையில்
நீ நடந்து செல்லும்
கால் தடங்களில்
மனது தட்டிச் செல்வதை
அறிவாயோ

எல்லாம் அழகு
அதில் அவள் ஒரு தனி அழகு

எழுதியவர் : தேகதாஸ் (1-Jul-16, 8:30 am)
பார்வை : 191

மேலே