இரு வேடங்கள்

வீரமும் ,விளைநிலமுமாய்
வீறு கொண்ட சேனையில்
விவேகமும் ,விநோதமும் கொண்டு
வெற்றிகண்ட பெரும் படை
மங்காப் புகழ் படைத்த
தங்கத்தலைவனின் தனிச்சிறப்பில்
தலை நிமிர்ந்த தமிழரினம்

வேடங்கள் தரித்த எத்தர்கள்
நாடேங்குமிருந்து வந்து நாசத்தை இட்டனர்
எழிவனத்தை எரிவனமாக்கிய எந்திரக்கரர்கள்
வாக்கு யாசகம் கேட்டலையும் கூட்டத்தாரின்
முகமூடி கழன்றது
சாக்குபோக்கு கூறி சாமாளிக்க வந்த
சமாதான நீதிபங்களின் சதிறாடல் புரிந்தது
அழிவை முன்னிறுத்தி ஆடம்பரமாய் வாழும்
அவல மனிதரின் பொய் முகம் புலர்ந்தது
நாடகதரிகளின் அபினாயம் நிலைக்காது
என்றும் ஏமாறுவோம் என்று
எள்ளளவும் நினைக்காதீர்
அன்று போல் ஓர் நாள் என்றும் வாழ்வோம்
என்பதை மறவாதே !!

எழுதியவர் : மட்டுநகர் கமல்தஸ் (2-Jul-16, 9:09 am)
பார்வை : 148

மேலே