கற்றாழை
அழகான தோட்டத்திலே
ரோஜாவும் , மல்லிகையும்,
பிச்சியும் , சூர்யகாந்தியும்
மணம் கமழ
தன்னந் தனியாக நின்றது
ஒரு சோற்றுக் கற்றாழை
அழகின் ஊடே ஒரு அழகற்றதாக
பச்சை நிறத்தில் இலைகள் கனமாக
கோணலாக நிற்கிறது கற்றாழை.
வேரோடு பிடுங்க நினைத்துப் போது
தடுத்தாள் என் தோழி.
அதன் பயன்களையும்,அதனின் சக்தியையும்
கூறியவுடன் மலைத்து நின்றேன் .
தீயனவற்றைக் கழிந்து, தீமையைப் போக்கி
நலம் பல செய்யும் செடியைப் பழித்தேனே
என்று வருந்தினேன்.