நங்கநல்லூர் ஆஞ்சநேயர்
சமீபத்தில் பிரபல நாடகாசிரியரும், வசனகர்த்தாவும், நடிகரும், கவிஞருமான திரு கிரேஸி மோகன் அவர்களது வெண்பாக்கள் படித்துப் பார்த்தேன். அவரது நடையிலேயே நங்கநல்லூர் ஆஞ்சநேயரைப் போற்றிய பாடல்கள் இவை.
கேட்டவுடன் படத்தை அனுப்பித் தந்த திரு கிரேஸி மோகனுக்கு என் நன்றி !
நேரிசை வெண்பாக்கள்
மருதீ உன்றன் மணிவாசல் நாடிவந்தோம்
பாருநீ தேடிவந்த பக்தருக்குச் - சீருநீ !
மேருநீ ! பாருநீ ! தேருநீ ! ஊருணீ
நீருநீ ! தீருநீ ஊறு !
நங்கநல் லூருறை நம்பிரான் தோழ!க்கு
ரங்குநீ ! காவேரி ரங்கனின் - பங்குநீ !
நுங்குநீ ! தொங்குநீ ! எங்குநீ பொங்குநீ !
கங்குநீ ! இங்குநீ தங்கு !
பீமனுக் கண்ணா FIGUREதீண்டா நல்மார்பா !
ராமனுக்குத் தோழா ! ரவிசீடா ! - ஷேமமே
வேண்டிநிற் கின்றோம் வெடுக்கென நின்னருளைக்
காண்டிபன்போ லெங்கட்கும் காட்டு !
ரிஷ்யமுக பர்வதத்தில் இஷ்ட்டமில்லாச் சுக்கிரீவன்
கஷ்டமதை மாய்த்தோர்க் கடியாளே ! - புஷ்டியான
தோளுடையாய் எந்நாளும் தோற்காத கதையுடையாய் !
ஆளென எம்மையுமேற் றாள் !
பங்கன பல்லியாய்ப் பார்த்தாய்ப் பகலவனை !
அங்கதன் போற்றிடும் UNCLEநீ ! - நங்கநல்
லூருறைத் தேவனே பேருரைக் கின்றோமே
சீருறநீ வந்தால் சிறப்பு !
-விவேக்பாரதி
படம் : கிரேஸி மோகன்