எங்க தமிழ் பாட்டு அது சங்க தமிழ் பாட்டு

ஏறு உழும் உழவனுக்கு
ஏத்த பாட்டு
எங்க தமிழ் பாட்டு

சோறு ஊட்டும்
குழந்தைக்குத் தான்
தாலாட்டு
எங்க தமிழ்பாட்டு

தாளத்தில் நிக்காது எங்க பாட்டு
தாரதப்பட்ட கிழியும் நம்ம பாட்டு

ஆமாம் நம்ம பாட்டு

கண்ணாமூச்சி ஆடும் குழந்தைகளும் பாடும்
காட்டுக் குயிலும் பாடும்
கானக் குரலும் பாடும்
வேள்வி ஞானமும் பாடும்
கேள்வி ஞானமும் பாடும்
எங்கத்தமிழ் பாட்டு
அது சங்கத்தமிழ் பாட்டு
பாமரனும் பாடும்
பைந்தமிழ் பாட்டு

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Jun-16, 3:23 pm)
பார்வை : 329

சிறந்த கவிதைகள்

மேலே