கற்றவர்கள் கண்களுக்கே காணப்படுவேன்
கவிதை! கவிதை என்றால்
என்னவென்று அறியாத இருவர்
என்னிடம் வந்து ’கிடைக்குமா’
கவிதை! என்ன விலை? என்றும்
கேட்டார்கள்; அவிழ்த்து விட்டேன்
வேடிக்கையான கற்பனையை..!
கவிதை ஒன்றை அங்கிருந்து
கையிலெடுத்து உயரத் தூக்கிப்
பிடித்து கண்ணாடியில் காண்பது போல
வெளிச்சத்தில் பார்க்கச் சொன்னேன்!
கவிதை என்ற கூண்டின் மேலே
காதை வைத்து கேட்கச் சொன்னேன்!
கவிதையாம் கூண்டுக்குள்ளே
எலிக்குஞ்சு ஒன்றைப் பிடித்து
போடச் சொன்னேன் பார்ப்போமென்று!
வெளியே தப்பிச் செல்லும் வழியை
விழிகொண்டு அது தேடுவதை
வேடிக்கையாய் பார்க்கச் சொன்னேன்!
முடிந்தால் நீங்களும்
கவிதை என்ற கூண்டு போன்ற
அறைக்குள்ளே சென்று நின்று
இருட்டினிலே வெளிச்சம் தர
அங்கிருக்கும் சுவற்றில் (switch)
மின்விசையைத் தேடுங்கள்!
கவிதை என்னும் நீர்ப்பரப்புத்
தளத்தில் சறுக்கின் மீதேறி
சுகமாகப் பயணம் செய்து அங்கே
கரையிலுள்ள கவிதையின் நாயகனை,
கவிஞனை சப்தமிட்டு அழைத்து
கையசைத்துக் கூப்பிடுங்கள்!
கவிதை! கவிதை என்றால்
என்னவென்று அறியாத இருவரும்
கவிதையை நாற்காலியில் கயிற்றால்
கட்டிப் போட்டு ’நீ யார்?
உன்னால் அறியும் பொருள் யாது?
உண்மையைச் சொல்’ என்று
துன்புறுத்திக் கேட்டார்கள்!
’அறிவு சூன்யம் உங்களுக்கு
அது விளங்காது! சீ! தூரப் போ!
கற்றவர்கள் கண்களுக்கே
நான் காணப்படுவேன்! –அறிவிலிகள்
உங்களுக்கு இங்கென்ன வேலை?