அவன் சிணுங்கள்

உன் மல்லி பூ தேகத்தை
அல்லி தூக்க சிணுங்குறியோ!
அவ மடிபடுத்து பால் குடிக்க
பசியினு அலுவுறியோ !!
உன் ஆடம் பாட்டம் பாக்கலைனு ஆதங்கத்தில் சிணுங்குறியோ !!!
அவ மடியேறி ஆடணும்னு
வேசம் போட்டு அலுவுறியோ!!!
சின்னவனே நீ சிணுங்கயில
சிவப்பு ரோசா கன்னம் பூக்கும் ...
மன்னவனே உன்ன சிரிக்கவைக்க
அம்புலியும் வேஷம் காட்டும் ...