உன்னை நம்பி தான் விட்டு போகிறேன்
ஆரம்பத்தில் விட்டுச்சென்றாய்
முடிவில்
வந்துவிட்டாய்
இடையில்
என்ன நேர்ந்தது
அறிவாயா நீ?
நான்
சாதிக்க வேண்டியது
இன்னும் நிறைய
உள்ளது
அதற்குள்ளாகவே
எனை
அழைத்துக்கொண்டாயே
இது நியாயமா
இது தான் உன் முறையா
என்னையே நினைத்து நினைத்து
நான் வருவேனென்று
எனக்காக
ஏங்கி
தவிக்கிறான்(ள்)
என் குழந்தை(கள்)
இது உனக்கு அடுக்குமா
இது தான் உன் தர்மமா
நான் விளையாடுவதற்கு முன்
ஆட்டத்தை களைத்தாயே
நான்
இரசிப்பதற்குள்
காட்டை அழித்துவிட்டாயே
திரையை விலக்கும் முன்
கண்ணை பறித்துவிட்டாயே
காய் கனிவதற்குள்
வேரறுத்தாயே
பாலை தரும் முன்
பாத்திரத்தை சிதறவிட்டாயே
தேனை தானே கேட்டேன்
விஷத்தை ஊட்டி விட்டாயே
(தேனை கேட்டதற்கு
விஷத்தை தந்தாயே)
சித்திரம் வரையுமுன்
சுவரை இடித்தாயே
தாயே
நீயே
என் சேயை(சேய்களை)
பார்த்துக் கொள்ள வேண்டும்
இந்த மகளை
உன் மடியில்
வாங்கிக்கொள் தாயே
மோட்சம் வேண்டாம் தாயே
அடுத்த பிறவியிலாவது
என் சேய்களுக்கே
நான் தாயாகி
மார்பிலும் தோளிலும்
மடியிலும் சுமந்து
பேணிகாக்கும்
வரம் தா
அந்த பிறவியிலும்
என் உயிரையே
முதலில் எடுத்துக்கொள்
தாயே
உன் காலடியிலேயே
வீழ்ந்துகிடப்பேன்
எந்நாளும்
என் சேய்களை
நன்றாக பார்த்துக்கொள் தாயே
~ பிரபாவதி வீரமுத்து